அதிரசம்Published: 2017-05-21Prep time: 48 hrs 0 min Cook time: 45 mins Total time: 48 hrs 45 mins
Summaryஅதிரசம் – Chettinad style Adhirasam

- Ingredients
- பச்சரிசி – 500 கிராம்
- வெல்லம் – 250 கிராம்
- ஏலக்காய் – 2 டீஸ்பூன்
- எண்ணெய் – 500 மி
- Directions
- அதிரசம் (Adhirasam) செய்யும் முறை வீடியோ
- பச்சரிசியை ஒரு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
- அதை அரவை மில்லில் அரைத்துக் கொள்ளவும் (தண்ணீர் இல்லாமல் அரிசியை நன்றாக வடித்துக் கொள்ளவும்) அல்லது மிக்ஸியில் தண்ணீர் விடாமல் நன்றாக வழுவழுப்பாக அரைக்கவும்.
- வெல்லத்தை நன்றாக பொடி பொடியாக எடுத்துக் கொள்ளவும்.
- அதில் மிக சிறிதளவு ¼ டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகுசெய்யவும் வெல்லம் கரைந்தவுடன் இதில் உள்ள கல்லை நிக்க வடிகட்டவும்.
- ஈரபச்சரிசி மாவுடன் 2 டீஸ்புன் எள்ளை வருத்து போட வேண்டும். அதில் ஏக்காய் பொடியையும் போடவும்.
- பிறகு பாகுவை ஊற்றி கலக்க வேண்டும். நன்றாக கலக்கி மூடி வைக்கவும்.
- ஒரு வெள்ளை துணியை போட்டு மூடவும். இரண்டு நாட்கள் கழித்து அதிரச மாவு தயராகிவிடும்.
- ஒரு காடாயில் எண்ணெய்யை ஊற்றி சூடான பிறகு அதில் மாவை வட்டமாக தட்டி நடுவில் ஒரு ஒட்டையை போட்டு எண்ணெயில் போட்டு எடுக்கவும். (சிம்மில் வைத்து செய்யவும்)
- திருப்பி போட்டு பொன் நிறமாக வரும்போது எடுக்க வேண்டும்.
- அதிரசம் ஒவ்வொன்றையும் தனிதனியாக சுட்டு எடுத்து தனிதனியாக ஆர வைக்கவும்.
- சூடு குறைந்த பிறகு எப்பொழுதும் போல் வைத்துக் கொள்ளலாம். இல்லை என்றால் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக் கொள்ளவும்.
- இப்பொழுது சுவையான அதிரசம் ரெடியாகி விட்டது.
- மாவை பிரிட்ஜ்யில் வைத்து ஒரு மாதத்திற்கு மேல் பயன்படுத்தலாம். தேவைப்படும் பொழுது அதை வெளியே எடுத்து வைத்து குளிர்ந்த தன்மை போன பிறகு அதிரசம் செய்து சாப்பிட்டலாம்.
Yield20
Serving size: 4
Calories per serving: 200
Fat per serving: 12g