பேபி உருளைக்கிழங்கு வறுவல்Published: 2018-12-27Prep time: 10 mins Cook time: 30 mins Total time: 40 mins
Summaryபேபி உருளைக்கிழங்கு வறுவல் சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

- Ingredients
- பேபி உருளைக்கிழக்கு – 200கி
- மிளகாய்(வத்தல்)பொடி – 1 டீஸ்பூன்
- மல்லிப் பொடி – 1 டீஸ்பூன்
- சோம்பு பொடி – ½ டீஸ்பூன்
- பூண்டு விழுது – ½ டீஸ்பூன்
- கொத்தமல்லி, கருவேப்பில்லை
- கடுகு, சீரகம் – தாளிக்க
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
- Directions
- பேபி உருளைக்கிழங்கு வறுவல் – Baby Potato Fry செய்முறை :-
- பேபி உருளைக்கிழங்கை வேக வைத்து, மேல் தோல் நிக்கிய எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கருவேப்பில்லை போட்டு தாளித்து, அதில் பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதங்கிய, பேபி உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்.
- அத்துடன் மசாலா பொடிகள் ( வத்தல்பொடி, மல்லிப்பொடி, சேம்பு பொடி) அனைத்தையும் சேர்த்து நன்றாக வதங்கிய, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- நன்றாக வதங்கிய பிறகு பரிமாறும் போது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். இப்பொழுது பேபி உருளைக்கிழங்கு மசாலா ரெடியாகி விட்டது.
Yield4
Serving size: 4 cup