Search




Banana Leaf Fish Fry Madurai Kitchen

வாழை இலை மீன் வருவல் – Banana Leaf Fish Fry

496
வாழை இலை மீன் வருவல்Prep time: 30 mins Cook time: 30 mins Total time: 60 minsவாழை இலை மீன் வருவல்Summaryவாழை இலை மீன் வருவல் – Banana Leaf Fish Fry










    Ingredients

  • விரால் மீன் – 11/2 கி
  • மிளகு சீரகத் தூள் – 2 டீஸ்பூன்
  • சிவப்பு மிளகாய் தூள் – 25கி
  • பூண்டு – 10 – 15
  • உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
  • வாழை இலை – தேவையான அளவு
    Directions

  1. வாழை இலை மீன் வருவல் – Banana Leaf Fish Fry :-
  2. மீனை நன்றாக கழுவி பிறகு அதில் இரண்டு கரண்டி இட்லி மாவு அல்லது தோசை மாவு சேர்த்துக் கலந்து 10 நிமிடம் ஊறவைத்து அதன் பிறகு கழுவி சமைத்தால் மீன் கவுச்சி வாடை இல்லாமல் இருக்கும்.
  3. மிளகு சீரகத் தூள், சிவப்பு மிளகாய் தூள், பூண்டு மற்றும் உப்பு இவை அனைத்தையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. மசாலாவை மீன் துண்டுகளில் நன்றாகத் தடவி, அதை ஒரு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் மசாலா பொரித்து எடுக்கும் போது கலராமல் இருக்கும்.
  5. வாழை இலையை கட் செய்து வைத்துக் கொள்ளவும். அதில் மீன் துண்டுகளை வைத்து மடித்துக் கொள்ளவும்.
  6. தோசை கல் நன்றாக சூடு ஏறிய பிறகு மடித்து வைத்துள்ள மீன் துண்டுகளை வைத்து மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.
  7. இரண்டு புறமும் நன்றாகப் புரட்டி போட்டு வேகவைக்கவும். வாழையிலையின் தன்மையும் அதன் சுவையும் நன்றாக கலந்து இருக்கும்
  8. இலை நன்றாக கருகும் வரை வேகவிடவும். அப்போதுதான் மீனில் உள்ளே வெந்து இருக்கும்.
  9. எண்ணெய் இல்லாமல் வாழை இலை மீன் சுவையாக சமைத்து சாப்பிடலாம்

Yield6

Serving size: 4
Calories per serving: 250
Fat per serving: 12g

வாழை இலை மீன் வருவல் – Banana Leaf Fish Fry சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *