பீட்ரூட் அல்வாPublished: 2017-11-27Prep time: 20 mins Cook time: 30 mins Total time: 60 mins
Summaryபீட்ரூட் அல்வா – Beetroot Halwa

- Ingredients
- பீட்ரூட் – 300 கிராம்
- சர்க்கரை – 150 கிராம்
- நெய் – 2 டீஸ்பூன்
- முந்திரிப் பருப்பு – 10
- பால் (அ) கோவா – 200 கிராம்
- ஏலக்காய் பொடி – ¼ டீஸ்பூன்
- Directions
- பீட்ரூட் அல்வா செய்வது எப்படி வீடியோ பாருங்கள்:
- பீட்ரூட்டை முதலில் சீவிக் கொள்ளவும். பாலை தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக காய்ச்சிக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் ஒரு கரண்டி நெய்யை விட்டு, சீவிய பீட்ரூட்டை போட்டு பீட்ரூட்டின் நிறமும், பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொண்டே இருக்கவும்.
- பிறகு அதில் கோவா (அ) காய்ச்சிய பாலை ஊற்றவும். அதனை 10 – 15 நிமிடங்கள் வரை வேக விடவும்.
- பீட்ரூட் பாலில் வெந்து வதங்கியவுடன், சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து அல்வாவை நன்றாக சுருள வதக்கவும்.
- அதனுடன் முந்திரியையும் சேர்த்து அல்வாவை நன்கு கிளறி இறக்கினால், ஆரோக்கியமான சுவையான பீட்ரூட் அல்வா ரெடி.
Yield6
Serving size: 1 கப்
பீட்ரூட் அல்வா (Beetroot Halwa) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.