சர்க்கரைப் பொங்கல்Published: 2017-11-16Prep time: 15 mins Cook time: 30 mins Total time: 45 mins
Summaryசர்க்கரைப் பொங்கல் – Chakarai Pongal

- Ingredients
- பச்சரி – 200 கிராம்
- பாசி பருப்பு – 50 கிராம்
- வெல்லம் – 600 கிராம்
- ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன்
- நெய் – 50 கிராம்
- பால் – 100 மிலி
- உலர்ந்த திராட்சை – 10
- முந்திரி பருப்பு – 10
- தேங்காய் துருவல் – தேவையான அளவு
- Directions
- சர்க்கரைப் பொங்கல் செய்முறை:-
- பச்சரிசி மற்றும் பாசிபருப்பை ஒரு முறை தண்ணீரில் கலைந்து எடுத்து அதை கீழே ஊற்றி விடவும்.
- இரண்டாவது மூன்றாவது முறை அரிசியை கலைய நாம் அளந்து எடுத்து வைத்திருக்கும் தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளவும்.
கலைந்த தண்ணீரை பொங்கல் பணையில் முக்கால் அளவு தண்ணீர் ஊற்றி, அதில் சிறிதளவு காய்ச்சியா பாலை ஊற்ற வேண்டும். - தண்ணீர் முறை கட்டி பொங்கி வரும் போது கழுவி வைத்துள்ள அரிசியையும் பருப்பையும் போடு வேக விட வேண்டும். அரிசி அரைபாதியாக வேகும் வரை கரண்டி போட்டுகிண்டக்கூடாது.
- பொங்கல் பாதிவெந்த பிறகு மிகமான சூட்டில் தான் வேக விட வேண்டும். அரிசி முக்கால் பாதியாக வெந்தப் பிறகு கரண்டி போட்டு அடிவர கிண்ட வேண்டும்.
- பொங்கல் நன்றாக வெந்தப்பிறகு பொங்கலை நன்றாக (மசித்து) குழைத்து விட வேண்டும்.
- அதில் ஏலக்காயையும், வெல்லத்தையும் போட்டு கிண்டவும் நன்றாக அடிவரை கிண்ட வேண்டும். இல்லையென்றால்அடியில் வெள்ளை பொங்கலாக இருக்கும்.
- ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் தேங்காய் துருவரை போட்டு வதக்கி அதையும், பொங்கலில் போடவும்.
- பிறகு கடாயில் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பையும், கிஸ்மிஸ்யையும் போட்டு பொன்நிறமாக வறுத்து அதையும் பொங்கலில் போட்டு நன்றாக கிளரவும்.
எல்லாம் நன்றாக கலந்து நெய் சொட்ட சொட்ட சர்க்கரைப்பொங்கல் ரெடியாகிவிட்டது. - இத்துடன் தேங்காய், வாழைப்பழம் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
Yield8
Serving size: 8 cups
Calories per serving: 230
Fat per serving: 58g