சிக்கன் கிரேவிPublished: 2017-06-30Prep time: 30 mins Cook time: 30 mins Total time: 60 mins
Summaryஇந்த சிக்கன் கிரேவி சப்பாத்தி, பரோட்டா, பிரியாணி, தோசை மற்றும் ரைஸ் இவை எல்லாவற்றிக்கும் மிகவும் நன்றாக இருக்கும்.

- Ingredients
- சிக்கன் – 250கி
- பல்லாரி – 2, தக்காளி – 2
- புதினா, கொத்தமல்லி – சிறிது
- கிராம்பு – 3, ஏலக்காய் – 2
- சோம்பு பொடி – ஒரு ஸ்பூன்
- பட்டை – 3 சிறிய துண்டு
- பிரிஞ்சி இலை – ஒன்று
- சிகப்பு மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
- மல்லி பொடி – 1 டீஸ்பூன்
- மிளகு பொடி – 1 டீஸ்பூன்
- கரம் மசாலா – ½ டீஸ்பூன்
- இஞ்சி, பூண்டு பேஸ்டு – 2 டீஸ்பூன்
- சோம்பு – ½ டீஸ்பூன்
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
- Directions
- சிக்கன் கிரேவி (Chicken Gravy) செய்முறை வீடியோ
- பல்லாரி, தக்காளியை சிறு துண்டாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், அன்னாச்சி பூ போன்ற அனைத்து பிரியாணி சாமான்கள் எல்லாம் போட்டு தாளிக்கவும்.
- அத்துடன் பல்லாரியை போட்டு நன்றாக பொன்நிறமாக மாறுவரை வதக்கவும்.
- அதில் புதினா, இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- நறுக்கி வைத்துள்ள தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.
- அத்துடன் சிக்கனை போட்டு லேசாக வதக்கி, அதில் மிளகாய் வத்தல் பொடி, மல்லி பொடி, கரம் மசாலா பொடி, சோம்பு பொடி மற்றும் மிளகு பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
- அதில் தயிரையும் சேர்த்து கிண்டவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடிவைத்து வேக விட வேண்டும்.
- சிக்கன் வேகும் போது நடுவில் கிண்டி விட வேண்டும்.
- 12 (அல்லது) 15 நிமிடத்தில் சிக்கன் நன்றாக வெந்து விடும்.
- இந்த சிக்கனில் மசாலா நல்ல மிக்ஸ் ஆகி சிக்கன் பிரட்டல் மாதிரி இருக்கவும்.
- தண்ணீயாக இருந்தால் சிறிது நேரம் வேக வைத்து எடுத்தால் கார சாரமான சிக்கன் கிரேவி (Chicken Gravy) ரெடியாகி விடும்.
Yield3
Serving size: 1 Cup
Calories per serving: 200
Fat per serving: 12g