சிக்கன் சால்னாPublished: 2018-05-26Prep time: 30 mins Cook time: 30 mins Total time: 60 mins
Summaryசிக்கன் சால்னா – Chicken Salna சிக்கன் சால்னாவை சாப்பத்தி, புரோட்டா மற்றும் பிரியாணி இவை அனைத்திற்கும் மிகவும் அருமையாக இருக்கும்.

- Ingredients
- சிக்கன் – 150கி
- பல்லாரி, தக்காளி – 1
- தேங்காய் – ½
- முந்திரிபருப்பு – 7
- சோம்பு, கசாகசா, கடுகு – ½ டீஸ்பூன்
- பட்டை, பிரிஜி இலை, கிராம்பு, ஏலக்காய் – சிறிதளவு
- Directions
- சிக்கன் சால்னா – Chicken Salna செய்முறை:-
- பல்லாரியை நிளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் தக்காளியையும், சிக்கனையும் நறுக்கிக்வைத்துக் கொள்ளவும்.
- தாளிக்க தேவையான பட்டை, பிரிஜி இலை, கிராம்பு, ஏலக்காய் இவை அனைத்து பொருட்களையும் எடுத்துவைத்துக் கொள்ளவும்.
- தேங்காய், முந்திரிபருப்பு, சோம்பு மற்றும் கசாகசா இவை அனைத்தையும் நன்றாக வழுவழுப்பாக அரைத்துக்கொள்ளவும்.
- சிக்கன் சால்னா செய்முறை:- ஒரு குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க தேவையான பொருட்களை போட்டு தாளிக்கவும். பிறகு சிறிது கடுகு போட்டுவெடித்ததும் .
- அதில் நறுக்கிய பல்லாரியை போட்டு பொன்நிறமாக வதக்க வேண்டும்.
அத்துடன் புதினா, நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதங்கிய, பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும். - அத்துடன் சுத்தம் செய்துவைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும், அத்துடன் மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து லேசாக வதக்கி, சால்னாவிற்கு தேவையான அளவுஉப்பு சேர்த்து கலக்கவும்.
- அதில் அரைத்து வைத்துள்ள தேங்காயை ஊற்றி நன்றாக கலக்கி (3 – 4) விசில் வைத்து இறக்க வேண்டும்.
- இறங்கிய பிறகு அதில் சிறிது புதினா, கொத்த மல்லியை துவி இறக்கினால் சிக்கன் சால்னா ரெடியாகி விடும்.
Yield4
Serving size: 1 கப்
Calories per serving: 190
Fat per serving: 18g
சிக்கன் சால்னா (Chicken Salna) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.