முட்டை கறிமசாலாPublished: 2018-03-20Prep time: 30 mins Cook time: 30 mins Total time: 60 mins
Summaryமுட்டை கறி மசாலா – Egg Curry Masala சப்பாத்தி, புரோட்டா மற்றும் சாதத்துடன் சாப்பிடும் போது நன்றாக இருக்கும்.

- Ingredients
- முட்டை – 5
- வெங்காயம், தக்காளி – 2
- இஞ்சி பூண்டு விழுது – ½ டிஸ்பூன்
- மசாலா பொடி – ½ டிஸ்பூன்
- கரமசாலா பொடி – ½ டிஸ்பூன்
- சோம்பு பொடி – ½ டிஸ்பூன்
- எண்ணெய், உப்பு
- Directions
- முட்டை கறி மசாலா செய்வது எப்படி வீடியோ பாருங்கள்:
- முட்டையை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அதனை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதனுடன் இஞ்சி பூண்டு விழுதுகளை போட்டு கொள்ளவும். பிறகு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- அதன்பின் தக்காளியுடன் உப்பு சேர்க்கும் போது தக்காளி விரைவில் வதங்கி விடும். தக்காளி நன்கு மசியும் வரை வதக்க வேண்டும்.
- அதனுடன் மசாலா பொடி, கரமசாலா பொடி, சோம்பு பொடி போட்டு மற்றும் தேவையான உப்பு போட்டு சிறிதளவு தண்ணீரும் ஊற்றி மசாலா வாடை போகும் வரை வேகவிடவும்.
- பிறகு ஒரு டிஸ்பூன் நல்லெண்ணெயும் ஊற்றி கொதிக்க விடவும். இதில் வெட்டிய முட்டைகளை போட்டு அதில் மசாலா படும்படி மிதமான சூட்டில் முட்டையை கிளறவும்,
- முட்டையில் நன்றாக மசாலா கலந்து வெந்த பிறகு இறக்கிவிடவும். சூடான முட்டை கறி மசாலா ரெடி.
Yield5
Serving size: 2
Calories per serving: 190
Fat per serving: 18
முட்டை கறி மசாலா (Egg Curry Masala) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.