Search




Madurai Kitchen Egg Manchurian

முட்டை மஞ்சூரியன் – Egg Manchurian

4243
முட்டை மஞ்சூரியன்Prep time: 30 mins Cook time: 30 mins Total time: 60 minsமுட்டை மஞ்சூரியன்Summaryமுட்டை மஞ்சூரியன் – Egg Manchurian










    Ingredients

  • முட்டை – 3
  • மைதா மாவு – 3 டீஸ்பூன்
  • சோள மாவு – 2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – ½ டீஸ்பூன்
  • மிளகு சீரகப்பொடி – 1 டீஸ்பூன்
  • ஆனியன், குடைமிளகாய்
  • சிவப்பு மிளகாய் சாஸ் – 1 டீஸ்பூன்
  • பச்சைமிளகாய் சாஸ் – 1 டீஸ்பூன்
  • சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
  • தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
  • ஸ்பிரிங் ஆனியன்
  • எண்ணெய் & உப்பு
    Directions

  1. முட்டை மஞ்சூரியன் (Egg Manchurian) செய்முறை வீடியோ:
  2. ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து வைத்துக் கொள்ளவும். அதில் மிளகு சீரகப்பொடி, மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்..
  3. ஒருகிண்ணத்தில் எண்ணெய் தடவி முட்டையை ஊற்றிக் கொள்ளவும். இதனை இட்லி கொப்பரை அல்லது குக்கரில் தண்ணீர் ஊற்றி அதன்மேல் கிண்ணத்தை வைத்து 10 முதல் 12 நிமிடம் வரை வேக வைக்கவும்.
  4. அதனை தனியே எடுத்து சிறு சிறு துண்டுகளாக கத்தியால் கீறி எடுத்து வைத்துக்கொள்ளவும்
  5. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு எடுத்து கொள்ளவும், மாவுடன் தண்ணீர் சேர்த்து கெட்டியான இட்லி மாவு பதத்தில் கலக்கவும்.
  6. பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அதில் முட்டையை மாவில் முக்கி அதை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  7. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
  8. அதில் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.சிறிதளவு மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்,
  9. உடனே அதில் சிவப்பு மிளகாய் சாஸ், பச்சைமிளகாய் சாஸ், சோயா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் சோளமாவை தண்ணீரில் கரைத்து அதையும் ஊற்றவேண்டும்.
  10. அத்துடன் உப்பு சேர்த்து கலவையை நன்றாக கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் பொரித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து வதக்கவும்.
  11. நன்கு சுருள வதக்கியதும், மேலே ஸ்பிரிங் ஆனியன் தூவி இறக்கினால் முட்டை மஞ்சூரியன் ரெடி.

Yield3

Serving size: 1 cup
Calories per serving: 160
Fat per serving: 12g

முட்டை  மஞ்சூரியன் (Egg Manchurian)
சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.