முட்டை புரோட்டா Published: 2018-12-23Prep time: 2 hrs 0 min Cook time: 30 mins Total time: 2 hrs 30 mins
Summaryமுட்டை புரோட்டா – Egg Parotta

- Ingredients
- மைதா – 250கி
- முட்டை – 6
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிது
- மிளகு சீரகப்பொடி – தேவையான அளவு
- Directions
- முட்டை புரோட்டா (Egg Parotta) செய்முறை :-
- மைதா மாவை எடுத்துக்கொள்ளவும். அதில் தண்ணீர் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். அதை சப்பாத்தி மாவு போல பிசைந்துக்கொள்ளவும்.
- அதன் மேல் எண்ணெய்யை தடவி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- ஒரு பெரிய பலகையை வைத்து லேசாக தேய்க்க கொள்ளவும்.
- ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் மிளகு சீரகப்பொடி, உப்பு (சால்னாவை) மற்றும் கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிது சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
- லேசாக தேய்த்த மாவை, சூடான தோசைக்கல்லில் போட்டு, அதன் மேலே கலந்து வைத்துள்ள முட்டையை பரவலாக ஊற்றி, மாவை முக்கோண அல்லது சதுர வடிவில் மடித்துக் கொள்ளவும்.
- சுற்றி எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வேக விடவும். அதனை புரட்டி போட்டு இருபுறமும் வேகவிடவும்.
- இப்பொழுது சூடான முட்டை புரோட்டா ரெடி. இது சாப்பிடுவதற்கு மிகவும் மிருதுவாக இருக்கும்.
Yield6
Serving size: 1 pie
Calories per serving: 100
Fat per serving: 120