குலாப் ஜாமூன்Published: 2017-05-21Prep time: 20 mins Cook time: 40 mins Total time: 60 mins
Summaryகுலாப் ஜாமூன் – Gulab Jamun

- Ingredients
- குளோப் ஜாம் மாவு – 200 கிராம்
- சர்க்கரை – 800 கிராம்
- ஏலக்காய் – ½ டீஸ்பூன்
- நெய் (அ) எண்ணெய் – 250 கிராம்
- Directions
- குலாப் ஜாமூன் (Gulab Jamun) செய்முறை வீடியோ…
- குளோப் ஜாமூன் மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். மாவு கையில் ஒட்டாதவாறு பிணைந்து கொள்ளவும்.
- ஒரு 5 நிமிடம் ஊர வைக்கவும்.
- பிறகு நன்றாக உருண்டையை செய்யவும். விரிசல் விழாமல் உருண்டையை சிறிது சிறிதாக செய்ய வேண்டும்.
- பிறகு ஒரு கடாயில் நெய் (அ) எண்ணெய் ஊற்றி சூடான பிறகு சிம்மில் வைத்து உருண்டையை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பொன் நிறமாக கலர் வரும் வரை பொறித்து எடுக்க வேண்டும்.
- 800 கிராம் சீனியை எடுத்துக் கொள்ளவும் அதற்கு இணையாக 800 கிராம் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
- அதில் ஏலக்காய் பொடியை போட வேண்டும்.
- சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பதத்தில் இறக்கி விடவும் .
- அதை இறக்கி வைத்து உருண்டையை போட வேண்டும்.(சூடான பாகுவில் உருண்டையை போட்டால் உடனே ஊறி விடும்).
- அதை இறக்கி வைத்து சூடு குறைந்த பிறகு செய்து வைத்துள்ள குளோப் ஜாமூன் உருண்டையை போட வேண்டும். இவ்வாறு செய்தால் உருண்டை உடையாது.
- குளோப் ஜாமூன் உருண்டை சர்க்கரை பாகுவில் ஊர குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும்.
- இரண்டு மணி நேரம் கழித்து மிகவும் மிருதுவான குளோப் ஜாமூன் உருண்டை ரெடியாகி விட்டது. அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுங்கள்.
Yield15
Serving size: 3 Pieces
Calories per serving: 200
Fat per serving: 12g