Search




நாவல் பழம் இவ்வளவு நல்லதா?

3019

நாவல் பழம் இவ்வளவு நல்லதா?

சுட்டப்பழம் வேண்டுமா சுடாதபழம் வேண்டுமா – என்று ஔவையாரிடம் முருகன் விளையாடிய பழம் நாவல் பழம் (எ) நவா பழம்

 

நாவல் மரம் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பான மரமாகபோற்றப்படுகிறது.
நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை.

 

நாகப்பழம், நவாப்பழம் நாவல் பழம், என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும், இந்தப் பழம் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.

 

மருத்துவ குணங்கள்

 

இரு வகைகள் உள்ளன, ஒன்று உருண்டை ரகம், இன்னொன்று நீள ரகம். இவற்றுள் நீள வடிவில்பெரியதாய் இருக்கும் பழவகையில்தான் இனிப்புச் சுவை அதிகம்.

 

உருண்டைராகமே மருத்துவ குணம் உடையது.

 

பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக்குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகைநோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்திசெய்யும்.

 

சிறுநீரகக் கற்கள் கரையவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரிசெய்யவும் நாவற்பழம் உதவுகிறது.

 

நீரிழிவு நோயை தடுக்கும் பழம் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.

 

நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடுதடுக்கப்படுகிறது.

 

நீரிழிவு நோயாளிகள், நாவல் பழத்தின் விதைகளைஇடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும்,மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டு சிறுநீர்ப்போக்குக் குறையும்.

 

பழச்சாற்றை தினமும் மூன்றுவேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.

 

நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் குழந்தைப் பேறுதரும். மூன்று நாவல்இலையை விழுதாய் அரைத்து கட்டித் தயிரில் கலக்கி அதிகாலையில்விடாமல் மூன்று மாதங்கள் சாப்பிட்டுவர, குழந்தைப் பேறு ஏற்படும்.

 

அதே போல, நாவல்மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவுசாப்பிட வேண்டும். காலை, மாலை என இரு வேளை 3 நாட்களுக்குதொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.

 

தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள்   வலுவாகும்.

Madurai Kitchen நாவல் பழம்

Madurai Kitchen நாவல் பழம்

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *