காஞ்சிபுரம் இட்லிPublished: 2017-07-05Prep time: 20 mins Cook time: 15 mins Total time: 35 mins
Summaryகாஞ்சிபுரம் இட்லி – Kanchipuram Idly

- Ingredients
- இட்லி மாவு – 1 கப்
- மிளகுபொடி – 1/4 டீஸ்பூன்
- சுக்குபொடி – 1/4 டீஸ்பூன்
- மஞ்சள் பொடி – 1/4 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
- முந்திரி பருப்பு – 15
- கடலைபருப்பு – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- இஞ்சி – சிறியது, பச்சைமிளகாய் – 2
- கருவேப்பிலை, கொத்தமல்லி இலை
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
- நெய் – 2 டீஸ்பூன்
- Directions
- காஞ்சிபுரம் இட்லி (Kanchipuram Idly) செய்முறை வீடியோ
- இட்லிஅரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக ஊற வைக்க 2 மணி நேரம் வேண்டும்.
- இட்லி அரிசியை நெரு, நெரு என அரைக்கவும்.
- உளுந்தை நன்றாக வழுவழுப்பாக அரைக்கவும்.
- பிறகு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பிறகு 6 மணி நேரம் கழித்து இட்லி செய்ய மாவு தயாராகும்.
- அரைத்து வைத்துள்ள இட்லி மாவுடன், மிளகுபொடி, சுக்குபொடி, மஞ்சள் பொடி மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவைகளை மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- கடாயில் நெய்யை ஊற்றி அதில் முந்திரி, கடலைபருப்பு போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
- அத்துடன் இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- இந்த வதக்கிய பொருட்களை சூடு ஆறிய பிறகு இட்லி மாவில் சேர்த்து கலக்கவும்.
- இட்லி கொப்பரையில் தண்ணீர் ஊற்றி சூடு பண்ணவும். சிறிய கிண்ணம் அல்லது டம்ளரில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி, அதனை இட்லி தட்டில் வைத்து இட்லி கொப்பரையில் வேக வைக்க வேண்டும்.
- 6 அல்லது 8 நிமிடத்தில் இட்லி நன்றாக வெந்து விடும்.
- கிண்ணங்களை இட்லி தட்டில் இருந்து எடுத்து வைத்து, கத்தியால் அதன் ஓரங்களில் கீறி விட்டு, பின்பு கிண்ணங்களை ஒரு தட்டில் தலைகீழாக கவிழ்த்தும்போது மிருதுவான காஞ்சிபுரம் இட்லி (Kanchipuram Idly) ரெடியாகி விடும்.
Yield4
Serving size: 3 Idly
Calories per serving: 200
Fat per serving: 12g