கார முருக்குPublished: 2017-05-25Prep time: 2 hrs 30 mins Cook time: 30 mins Total time: 3 hrs 0 min
Summaryகார முருக்கு – Kara Murukku, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Ingredients
- இட்லி அரிசி – 500g
- எள் – 2 டீஸ்பூன்
- பெருங்காயம் – ¼ டீஸ்பூன்
- எண்ணெய் – 500ml
- வத்தல் – 7
- பொறிகடலை – 50g
- வெண்ணெய் – 1 டீஸ்பூன்
- Directions
- கார முருக்கு (Kara Murukku) செய்முறை
- இட்லி அரிசியையும், வத்தல் 7 யையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- அதை வழுவழுப்பாக அரைத்துக்கொள்ளவும். மாவு கெட்டியான பாகத்தில் இருக்க வேண்டும்.
- எள்ளை வருத்து எடுத்துக் கொள்ளவும்.
- பொறிகடலையை மீக்ஸியில் நன்றாக வழுவழுப்பாக அரைக்கவும். அதை சல்லடையில் போட்டு சலித்துக் கொள்ளவும். அதையும் அரைத்த மாவில் போடவும்.
- பெருங்காயம், வெண்ணெய், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். மாவு ஒரு கெட்டியான பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும்.
- முருக்கு உழக்கில் வைத்து வட்டமாக சுற்றி எண்ணெய்யில் போட்டு எடுக்கவும்.
- முருக்கு சிகப்பு நிறத்தில் அழகாக இருக்கும். சாப்பிடுவதற்கு காரமாக இருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும்.
Yield10
Serving size: 6
Calories per serving: 150
Fat per serving: 12g