Search




Madurai Kitchen Kuzhi Paniyaaram

குழி பனியாரம் – Kuzhi Paniyaaram

3526
குழி பனியாரம் Prep time: 8 hrs 0 min Cook time: 20 mins Total time: 8 hrs 20 minsகுழி பனியாரம் Summaryகுழி பனியாரம் – Kuzhi Paniyaaram வெல்லம், வெந்தயம், நெய், சேர்ப்பதால், உடம்பிற்கு நன்று. இது உடல் உஷ்ணத்தைத் தனிக்கும் தன்மை உடையது










    Ingredients

  • பச்சரிசி – 1 கப் (100 கிராம்)
  • இட்லி அரிசி – 1 கப் (100 கிராம்)
  • உளுந்து – ¼ கப் (25 கிராம்)
  • வெந்தயம் – 1 டீஸ்பூன்
  • சோடா உப்பு – ¼ டீஸ்பூன்
  • வெல்லம் – 250 கிராம்
  • ஏலக்காய் – 2
  • நெய் (அ) எண்ணெய் – 25 கிராம்
    Directions

  1. குழி பனியாரம் (Kuzhi Paniyaaram) செய்முறை வீடியோ:-
  2. பச்சரிசி, இட்லிமாவு, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  3. அதை நொறு நொறு என்று அரைத்துக் கொள்ளவும். சிறிது கட்டியாக மாவு இருந்தால் மிகவும் நல்லது.
  4. அதை 6 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்
  5. வெல்லத்தை எடுத்து சிறு சிறு துண்டாக தட்டி எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு (1/4 டம்ளர்) தண்ணீர் ஊற்ற வேண்டும்
  6. அதை அடுப்பில் வைத்து பாகு கட்டிகள் இல்லாமல் கரையும் வரை காய்ச்ச வேண்டும். பாகு இறுகி விடாமல் இறக்கி விட வேண்டும்.
  7. பின்பு தயார் செய்து வைத்துள்ள மாவு கலவையில் பாகுவை வடிகட்டி ஊற்ற வேண்டும். இப்பொழுது பணியார மாவு கலவை தயார். அதில் சிறிது சோடா உப்பு போட வேண்டும்.
  8. பனியார சட்டியில் நெய் (அ) நல்லெண்ணெய் எடுத்து சட்டியில் தடவிவிட்டு மாவை ஊற்றி எண்ணைய்யை சுற்றி ஊற்ற வேண்டும்.
  9. அதன் மேல் ஒரு தட்டை வைத்து மூடிவிட வேண்டும். ஒரு சில துளிகள் கழித்து பனியாரத்தை பிரட்டி போட வேண்டும்.
  10. சிறிது எண்ணைய்யை சுற்றி விட வேண்டும். பின்பு தட்டில் எடுத்து பனியாரத்தை பரிமாறவும்
  11. இதை காலை, மாலை நேரத்தில் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இது லேசான உணவாகவும் அமையும்.

Yield6

Serving size: 6
Calories per serving: 200
Fat per serving: 12g

குழி பனியாரம் – Kuzhi Paniyaaram சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும் 

 

 



One thought on “குழி பனியாரம் – Kuzhi Paniyaaram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *