லட்டுPublished: 2017-05-24Prep time: 15 mins Cook time: 30 mins Total time: 45 mins
Summaryலட்டு – Laddu

- Ingredients
- கடலைமாவு – 1 கப் (200கி)
- சர்க்கரை – 1 கப் (200கி)
- தண்ணீர் – 3/4 கப்
- ஏலக்காய் பொடி – ¼ டீஸ்பூன்
- முந்திரி பருப்பு – 10
- கிஸ்மிஸ் – 10
- எண்ணெய் – 250மி
- நெய் – 2 டீஸ்பூன்
- Directions
- லட்டு (Laddu) செய்முறை :-
- ஒரு பாத்திரத்தில் சர்க்கரை 1 கப் தண்ணீர் அதில் ¾ கப் ஊற்றி கொதிக்க வைக்கவும்,
- அதில் ஏலக்காய் பொடியை போடவும்.சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பதத்தில் பாகுவை இறக்கி விடவும்.
- ஒரு பாத்திரத்தில் 1 கப் கடலைமாவை போட்டு அதில் தண்ணீர் விட்டு தோசைமாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி சூடு செய்யவும், அறிகரண்டியே வைத்து மாவை ஊற்றவும் மாவை எண்ணெய் பக்கத்தில் வைத்து ஊற்ற வேண்டும். இல்லை என்றால் நிள நிளமாக வரும். பக்கத்தில் வைத்து போட்டல் தான் உருண்டையாக வரும்.
- எண்ணெய்யில் பொறித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.
- சூடான பாகுவில் செய்து வைத்துள்ளதை போட்டு நன்றாக கலக்கவும்.
- முந்திரி, கிஸ்மிஸ்யையும் போட்டு நெய்யில் வருத்து எடுத்து கொள்ளவும், அதை கலந்து வைத்துள்ள கலவையில் போட்டு கலக்கவும்.
- பிறகு 5 நிமிடம் கழித்து உருண்டை பிடிக்கவும், இப்பொழுது சுவையான லட்டு (Laddu) தயாராகி விட்டது.
Yield15
Serving size: 2
Calories per serving: 250
Fat per serving: 12g
லட்டு (Laddu) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்