லெமன் ரைஸ்Published: 2017-05-24Prep time: 30 mins Cook time: 20 mins Total time: 50 mins
Summaryலெமன் ரைஸ் – Lemon Rice

- Ingredients
- அரிசி – 200 கிராம்
- லெமன் – 2
- மிளகாய் வத்தல் – 3
- கடலைபருப்பு – 2 டீஸ்பூன்
- பெருங்காயம் – ¼ டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
- வெந்தயம் – 1 டீஸ்பூன்
- மல்லி – 1 டீஸ்பூன்
- நிலக்கடலை
- நல்லெண்ணைய் – தேவையான அளவு
- Directions
- லெமன் ரைஸ் – Lemon Rice செய்முறை
- அரிசியை 1 கப் எடுத்துக் கொள்ளவும். அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- வெந்தயம், மல்லி, கடலைபருப்பு போன்றவற்றை கடாயில் போட்டு பொறித்து எடுத்துக் கொள்ளவும். அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- இதை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொண்டு லெமன் ரைஸ் பண்ணும்பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.
- 200 கிராம் ரைஸ்க்கு 2 லெமன் (அ) 3 லெமன் சரியாக இருக்கும்.
- எண்ணெய்யில் நிலகடலையை வருத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி அதில் கடுகை போட்டு தாளிக்கவும்.
- கருவேப்பிலை, கடலைபருப்பு, வத்தலை போடவும், உடனே லெமன் சாறை ஊற்ற வேண்டும்.
- பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள், லெமன் பொடியையும் தேவையான அளவு போடவும்.
- ஒரு கொதி வந்த பிறகு இறக்கிவிடவும், அதில் செய்து வைத்துள்ள ரைஸ்யை லெமன் சாற்றில் போட்டு கிளரவும், சிறிது நல்லெண்ணைய் சேர்க்கவும்.
- அதில் வருத்து வைத்துள்ள நிலக்கடலை பருப்பை தூவி கிளரவும்.
- இப்பொழுது அறுமையான லெமன் ரைஸ் ரெடியாகி விட்டது. லெமன் ரைஸ்க்கு இணையாக உருளைக்கிழங்கு மசாலா, தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.
Yield3
Serving size: 1 Plate
Calories per serving: 200
Fat per serving: 12g