மாங்காய் தொக்குPublished: 2017-11-18Prep time: 45 mins Cook time: 30 mins Total time: 1 hr 15 mins
Summaryமாங்காய் தொக்கு – Mango Thokku

- Ingredients
- மாங்காய் – 250 கிராம்
- எண்ணெய் – 3 டீஸ்புன்
- வெந்தயம் – 1/2 டீஸ்புன்
- கடுகு -1 டீஸ்புன்
- பெருங்காயத்தூள் – 1 டீஸ்புன்
- மிளகாய்த்தூள் – 3 டீஸ்புன்
- Directions
- மாங்காய் தொக்கு செய்முறை:
- மாங்காயை முதலில் தோலை சீவி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாலித்து அதனுடன் சீவிய மாங்காயை போட்டு நன்கு வதக்கவும்.
- அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் போட்டு எண்ணெயிலேயே வதக்கவும்.
- மாங்காய் வதக்கிய நிலையில் அதனுடன் பெருங்காயத்தூள் மற்றும் வெந்தய பொடியை சேர்த்துக் கொள்ளவும்.
- ஊற்றிய எண்ணெய் கொதித்து வெளியே வந்தவுடன் இறக்கி விடவும்.
இப்பொழுது மாங்காய் தொக்கு ரெடி - ஒரு மாதம் ஆனாலும் மாங்காய் தொக்கு நன்றாக இருக்கும். இதை தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
Yield20
Serving size: 1 டீஸ்புன்
மாங்காய் தொக்கு (Mango Thokku) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.