மினி இட்லிPublished: 2017-05-22Prep time: 8 hrs 0 min Cook time: 25 mins Total time: 8 hrs 35 mins
Summaryமினி இட்லி – Mini Idli

- Ingredients
- இட்லி அரிசி – 1 கப் (400 கிராம்)
- உளுந்து – ¼ கப் (100 கிராம்)
- பாசிபருப்பு – 50 கிராம்
- சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
- கேரட் – 25 கிராம்
- பீன்ஸ் – 25 கிராம்
- நெய் – 2 டீஸ்பூன்
- தக்காளி – 1
- வத்தல் – 2
- சீரகம் – ¼ டீஸ்பூன்
- வெந்தயம் – ½ டீஸ்பூன்
- Directions
- மினி இட்லி (Mini Idli) செய்முறை
- இட்லிஅரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக ஊற வைக்க 2 மணி நேரம் வேண்டும்.
- அரிசியை நெறுநெறு என்று அரைக்க வேண்டும்.( வழுவழுப்பாக ஆகக்கூடாது)
- பிறகு உளுந்தை பொங்கும் வரை மையாக அரைக்கவும், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டையும் கலக்கவும்.
- பிறகு 6 மணி நேரம் கழித்து இட்லி செய்ய மாவு தயாராகும்.
- மினி இட்லி தட்டில் சிறிய அழகான குழியில் மாவை ஊற்றி 3 நிமிடம் வேக வைக்கவும்.
- இட்லி ரெடியாகி பிறகு அதை ஒரு கரண்டியால் எடுத்து, இதை தட்டில் வைத்துக் கொள்ளவும்.
- பாசிப்பருப்பு நறுக்கிய பல்லாரி, தக்காளி, கேரட், பீன்ஸ், பெருங்காயம், மற்றும் சாம்பார் பொடி சேர்த்து குக்கரில் நான்கு விசில் வைத்து இறக்கவும்.
- பிறகு கடாயில் நெய்விட்டு சூடான பிறகு கடுகு போட்டு, கடுகு வெடித்தவுடன் வெங்காயம், கருவேப்பிலை, வத்தல் மற்றும் பெருங்காயம் போட்டு தாளிக்கவும், இதை சாம்பாரில் ஊற்றி கலக்கவும்.
- ஒரு கிண்ணத்தில் மினி இட்லியை எடுத்துக் கொள்ளவும்.
- அதில் சாம்பார் ஊற்றி அதில் ஒரு கரண்டி நெய் சேர்த்து, மேலே கொத்தமல்லி தூவி வைத்தால் அழகான மினி இட்லி ரொடியாகும்.
Yield6
Serving size: 14 idli per plate
Calories per serving: 180
Fat per serving: 12g