முந்திரி ரவை அப்பம்Published: 2017-05-20Prep time: 20 mins Cook time: 20 mins Total time: 40 mins
Summaryமுந்திரி ரவை அப்பம் – Muntiri Rava Appam

- Ingredients
- ரவை – 1 கப் (100 கிராம்)
- மைதா – 1 கப் (100 கிராம்)
- சீனி – 1 கப் (100 கிராம்)
- ஏலக்காய் பொடி – ¼ டீஸ்பூன்
- முந்திரிபருப்பு – 10
- கிஸ்மிஸ் – 10
- எண்ணெய் – 250 மிலி
- நெய் – தேவையான அளவு
- Directions
- முந்திரி ரவை அப்பம் (Muntiri Rava Appam) செய்முறை வீடியோ…
- ரவையை சிறிது தண்ணீர் தெளித்து ஊற வைக்க வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து அதில் மைதா,சீனியை போடவும்.
- முந்திரியை சிறிய சிறிய துண்டாக கட் செய்து வைத்து கொள்ளவும். ஏலக்காய்யை பொடி செய்து வைத்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரியையும், கிஸ்மிஸ்யையும் வறுத்து எடுக்கவும்.
- பிறகு ஏலக்காய்பொடி, சோடா உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி இவை அனைத்தையும் நன்கு கலக்கி இட்லி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.
- கடாயில் எண்ணெய்யை ஊற்றி சூடான பிறகு ஒரு குழி கரண்டியில் மாவை எடுத்து எண்ணெய் சிறிய சிறிய அப்பமாக ஊற்றவேண்டும்.
- லேசான சூட்டில் அப்பம் உள்ளே நன்றாக வேகும். பிறகு அதை புரட்டி விட்டு பொன்நிறமாக வரும் வரை வேக வைக்கவும்.
- ரவை, மைதா, சீனி மூன்றையும் சமஅளவில் இருந்தால்தான் அப்பம் சரியாக இருக்கும், இல்லை என்றால் சட்டியில் ஒட்டிக்கொண்டு கஷ்டமாக இருக்கும்.
- பிறகு அப்பம் ரெடியாகி விடும். வாழைப்பழம் சேர்ப்பதால் மிகவும் மிருதுவாக இருக்கும். இது இரண்டு நாட்களுக்கு கூட இருக்கும்.
Yield5
Serving size: 4
Calories per serving: 150
Fat per serving: 10g