முட்டை கொத்து புரோட்டாPublished: 2017-08-03Prep time: 20 mins Cook time: 20 mins Total time: 40 mins
Summaryமுட்டை கொத்து புரோட்டா – Muttai Kothu Parotta

- Ingredients
- புரோட்டா – 5
- தக்காளி – 1, பல்லாரி – 3
- எண்ணெய்- 50 கிராம்
- மிளகு சீரக்பொடி – 2 டீஸ்பூன்
- சிகப்பு மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்
- முட்டை – 4 தேவையான அளவு
- பச்சைமிளகாய் – 4
- சால்னா – 1 கப்
- Directions
- முட்டை கொத்து புரோட்டா (Muttai Kothu Parotta) செய்முறை :-
- வெங்காயம் பல்லாரி, பச்சைமிளகாய், தக்காளி இவை அனைத்தையும் சிறிய சிறிய துண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- அதில் 5 புரோட்டாவிற்கு 4 முட்டை என்று எடுத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் பல்லாரி, பச்சைமிளகாய் பொன்நிறமாக வதக்க வேண்டும்.
- அதில் தக்காளி போட்டு வதக்கவும், முட்டையை உடைத்து ஊற்றவும், அதில் மிளகு சீரக்பொடி, சிகப்பு மிளகாய்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- புரோட்டாவை துண்டு துண்டாக கட்செய்து அதையும் போட்டு வதக்கவும்.
- அதில் 2 அல்லது 3 கரண்டி சால்னாவை ஊற்றி நன்றாக வதக்கவும்.
- வதக்கியுடன் மேலே கொத்தமல்லி தூவி இறக்கினால், சுட சுட அருமையான முட்டை கொத்து புரோட்டா (Muttai Kothu Parotta) ரெடி.
Yield4 கப்
Serving size: 4
Calories per serving: 260
Fat per serving: 54g
முட்டை கொத்து புரோட்டா ( Muttai Kothu Parotta ) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.