மட்டன் பிரியாணிPublished: 2017-08-03Prep time: 60 mins Cook time: 30 mins Total time: 1 hr 30 mins
Summaryமட்டன் பிரியாணி – Mutton Briyani

- Ingredients
- சீரக சம்பா – 500கி (1 கப்)
- மட்டன் – 500கி
- பல்லாரி – 2, தக்காளி – 2
- பச்சை மிளகாய் – 4
- புதினா, கொத்தமல்லி – சிறிது
- இஞ்சி பூண்டு பேஸ்டு – 2 டீஸ்பூன்
- கரம் மசாலா – ½ டீஸ்பூன்
- மிளகாய் வத்தல் பொடி – 1 டீஸ்பூன்
- மல்லி பொடி – 1 டீஸ்பூன்
- முந்திரி பருப்பு – 10
- அன்னாசி பூ-1, கிராம்பு – 3 பட்டை – 2 சிறிய துண்டு
- ஏலக்காய் – 2 பிரிஞ்சி இலை – 2
- லெமன் – ½ பழம், சோம்பு – ¼ ஸ்பூன்
- நெய் – 2 டீஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- Directions
- மட்டன் பிரியாணி (Mutton Briyani) செய்முறை :-
- பட்டை, கிராம்பு, லவங்கப்பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய், சோம்பு இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் பொடிபண்ணி வைத்துக்கொள்ளவும்.
- இந்த பிரியாணி பொடியை, அதிகப்படியாக செய்து வைத்து கொண்டால், தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.
- பிரியாணி அரிசியை தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊர வைத்து, பிறகு தண்ணீர் இல்லாமல் நன்றாக வடித்து விடவேண்டும்.
- தக்காளி, பச்சைமிளகாய் – 2, புதினா, கொத்தமல்லி சிறிது இவை அனைத்தையும் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- நீளவாக்கில் பல்லாரி வெங்காயம் .2 பச்சை மிளகாயை நறுக்கி கொள்ளவும், புதினா எடுத்துக் கொள்ளவும்.
- மட்டனை தண்ணீர் ஊற்றி, தேவையான உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். அந்த தண்ணீரை பிரியாணி செய்ய பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
- இவை எல்லாம் தயார் செய்து வைத்துக் கொண்டு பிரியாணி செய்ய ஆரம்பிக்கலாம்.
- ஒரு குக்கரில் எண்ணெய்யை ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, லவங்கப்பட்டை, பிரியாணி இலை, சோம்பு ஏலக்காய் இவை அனைத்தையும் போடவும்.
- நறுக்கிய பல்லாரி, புதினா போட்டு வதக்கவும். வதங்கிய உடன் இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும். அரைத்து வைத்துள்ள தக்காளி, பச்சைமிளகாய், புதினா கொத்தமல்லி போட்டு வதக்கவும்.
- காரம் மசாலா, பிரியாணி சாமான்கள் பொடி, மிளகாய் வத்தல் பொடி, மல்லி மஞ்சள் பொடி போட்டு வதக்கவும்.
- மட்டனைப்போட்டு, அதில் தயிர் சேர்த்து நன்றாக மசாலா கலவையில் கிளறிவிடவும்.
- அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி (1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர்), தேவையான உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்.
- தண்ணீர் கொதித்த, பிறகு அரிசியை போட்டு, அதில் லெமன் சாறை ஊற்ற வேண்டும். குக்கரை மூடிவைத்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.
- கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்துக் கொள்ளவும். அதை விசில் இறங்கிய பிறகு மட்டன் பிரியாணியில் போட்டு நன்றாக கிளறவும்.
- அதில் மட்டன் நன்றாக வெந்து இருக்கும், இத்துடன் வேக வைத்த முட்டையையும், தயிர் வெங்காயத்தையும் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
- இப்பொழுது மட்டன் பிரியாணி ரெடியாகி விட்டது
Yield4
Serving size: 4 Plate
Calories per serving: 250
Fat per serving: 24g
மட்டன் பிரியாணி – (Mutton Briyani) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.