Search




Mutton Gravy Madurai Kitchen

மட்டன் கிரேவி – Mutton Gravy

1892
மட்டன் கிரேவி – Mutton GravyPrep time: 30 mins Cook time: 40 mins Total time: 1 hr 10 minsமட்டன் கிரேவி - Mutton GravySummaryமட்டன் கிரேவி – Mutton Gravy










    Ingredients

  • மட்டன் – ½ கிலோ
  • சின்ன வெங்காயம் – 10-12 எண்ணம்
  • தக்காளி – 1
  • இஞ்சி பூண்டுவிழுது – 1 டீஸ்பூன்
  • சிகப்பு வத்தல் பொடி – 1 டீஸ்பூன்
  • மசாலா பொடி – 1 டீஸ்பூன்
  • மல்லி பொடி – 1 டீஸ்பூன்
  • சோம்பு – ½ டீஸ்பூன்
  • கசகசா – ¼ டீஸ்பூன்
  • தேங்காய் – சிறிதளவு
  • நல்லெண்ணெய், எண்ணெய் – தேவையான அளவு
  • முந்திரிப்பருப்பு – 5
  • தாளிக்க: பட்டை, சோம்பு, கடுகு உளுந்து, கிராம்பு, இலவங்கப்பட்டை இலை கருவேப்பில்லை, புதினா, கொத்தமல்லி இலை – சிறிதளவு
    Directions

  1. மட்டன் கிரேவி செய்முறை :-
  2. குக்கரில் சுத்தம் செய்துள்ள மட்டன் தூண்டுகளுடன் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி 4 விசில் வைத்து இறக்கவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, போட்டு தாளித்து அதனுடன் பட்டை, சோம்பு இலவங்கப்பட்டை இலை மற்றும் கிராம்பு சின்னவெங்காயம் போட்டு வதக்கவும், அதில் ஒரு சிறிய தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட்யை போட்டு வதக்கவும்
  4. அதனுடன் சிகப்பு வத்தல் பொடி, மசாலா பொடி, மல்லி பொடி போட்டு வதக்கவும்
  5. தேங்காய், பெருஞ்சீரகம், முந்திரிப்பருப்பு கசகச சேர்த்து அரைத்த கலவையை சிறிதளவு(1 டீஸ்பூன்) போட்டு வதக்கவும்.
  6. மட்டனைப் வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து நன்றாக மசாலா கலவையில் கிளறி உப்பு சேர்த்து சரிபார்க்கவும். எண்ணெய் மேலே கொதித்து வெளியே வந்தவுடன் இறக்கி விடவும்.
  7. அதன்மேல் புதினா, கொத்தமல்லி தழைகளைத் தூவி இறக்கினால் மட்டன் கிரேவி தயார்
  8. மட்டன் கிரேவி தோசை, பரோட்டா, சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அறுமையாக இருக்கும்.

Yield4

Serving size: 1 கப்

மட்டன் கிரேவி  (Mutton Gravy) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.

 

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *