மட்டன் குழம்பு – கிராமத்து மட்டன் குழம்பு Published: 2020-01-23Prep time: 30 mins Cook time: 40 mins Total time: 1 hr 10 mins
Summaryமட்டன் குழம்பு – கிராமத்து மட்டன் குழம்பு – Mutton Kuzhambu

- Ingredients
- மட்டன் – ½ கிலோ
- சின்ன வெங்காயம் – 10-12 எண்ணம்
- சிகப்பு மிளகாய் வத்தல் – 6-8
- சீரகம் – ½ டீஸ்பூன்
- சோம்பு – ½ டீஸ்பூன்
- கசகசா – ¼ டீஸ்பூன்
- தேங்காய் – சிறிதளவு
- மசாலா பொடி – 1 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டுவிழுது – 1 டீஸ்பூன்
- தாளிக்க: பட்டை, சோம்பு, கடுகு உளுந்து, கிராம்பு, இலவங்கப்பட்டை இலை கருவேப்பில்லை, புதினா, கொத்தமல்லி இலை – சிறிதளவு
- Directions
- கிராமத்து மட்டன் குழம்பு – Mutton Kuzhambu செய்முறை :-
- முதலில் சின்னவெங்காயத்தை கடாயில் எண்ணெய் ஊற்றி வதக்கவும். சிறிது வதங்கிய பிறகு மிளகாய் வத்தலை போட்டு வதக்கவும், பொன்னிறமாக வந்ததும் இறக்கி விடவும்.
- பிறகு தேங்காய்துருவல், சோம்பு, சீரகம், கசகசா மற்றும் அத்துடன் வதக்கிய வைத்துள்ள வெங்காயம், மிளகாய் வத்தலையும் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- குக்கரில் சுத்தம் செய்துள்ள மட்டன் தூண்டுகள் மற்றும் அரைத்துள்ள மசாலா, உப்பு, விட்டில் உள்ள மசாலா பொடி, இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வைத்து இறக்கினால், நன்கு வெந்து மட்டனில் மசாலா நன்றாக கலந்து இருக்கும்.
- கடாயில் கடுகு, உளுந்து, போட்டு தாளித்து அதனுடன் பட்டை, சோம்பு இலவங்கப்பட்டை இலை மற்றும் கிராம்பு போட்டு பொன்னிறமாக வதக்கி மட்டன் குழம்பில் ஊற்றவும்.
- அதன்மேல் கொத்தமல்லி தழைகளைத் தூவி இறக்கி, சுட சுட சாதத்தில் குழம்பை ஊற்றி சாப்பிட்டால் கார சரமாக மட்டன் குழம்பு அறுமையாக இருக்கும்.
Yield4
Serving size: 1 கப்
மட்டன் குழம்பு – கிராமத்து மட்டன் குழம்பு (Mutton Kuzhambu) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.