Search




Mutton Liver Fry Madurai Kitchen

ஈரல் வறுவல் – Mutton Liver Fry

514
ஈரல் வறுவல் – Mutton Liver FryPrep time: 20 mins Cook time: 20 mins Total time: 40 minsஈரல் வறுவல் - Mutton Liver FrySummaryஈரல் வறுவல் – Mutton Liver Fry










    Ingredients

  • ஈரல் – 250 கி
  • சின்ன வெங்காயம் – 10-12 எண்ணம்
  • இஞ்சி பூண்டுவிழுது – 1 டீஸ்பூன்
  • மசாலா பொடி – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா பொடி – ½ டீஸ்பூன்
  • பெருஞ்சீரகம் – ½ டீஸ்பூன்
  • தேங்காய் – சிறிதளவு
  • நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
  • தாளிக்க: எண்ணெய், பட்டை, சோம்பு, கடுகு உளுந்து, கிராம்பு, இலவங்கப்பட்டை இலை கருவேப்பில்லை, புதினா, கொத்தமல்லி இலை – சிறிதளவு
    Directions

  1. ஈரல் வறுவல் – Mutton Liver Fry செய்முறை :-
  2. ஈரல் வாங்கும் பொழுது அதை வெட்டாமல் வாங்கிக் கொள்ளவும்.
  3. ஈரலை சுத்தம் செய்த, பிறகு சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
  4. .தேங்காய், பெருஞ்சீரகம் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  5. குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து, அதில் பட்டை, கிராம்பு, இலவங்கப்பட்டை, புதினா மற்றும் சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
  6. சிறிது நேரத்தில் ஈரலின் கலர் மாறிவிடும், அத்துடன் மசாலா பொடி, கரம் மசாலா பொடி தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும் மசாலா வாடை போகும் வரை வதக்கவும்.
  7. அதில் தேங்காய் பெருஞ்சீரகம் அரைத்து வைத்த கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி 2 விசில் வைத்து இறக்கவும்.
  8. விசில் இறங்கியதும் ஈரலில் தண்ணீர் வற்றும் வரை வதக்கவும், அதில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி இறக்கி வதக்கவும்.
  9. மேலே கொத்தமல்லி, புதினா தூவி இறக்கி விடவும் சுவையான ஈரல் வறுவல் ரெடி..
  10. தோசை, சாதம், சப்பாத்தி மற்றும் இடியாப்பம் இவை அனைத்திற்கும் மிகவும் நன்றாக இருக்கும்.

Yield3

Serving size: 1 கப்

ஈரல் வறுவல் (Mutton Liver Fry) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *