ஆனியன் குருமாPublished: 2017-08-03Prep time: 20 mins Cook time: 20 mins Total time: 40 mins
Summaryஆனியன் குருமா -Onion Kuruma சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

- Ingredients
- பல்லாரி – 2, தக்காளி – 1
- பச்சைமிளகாய் – 4
- தேங்காய் – ½ மூடி
- கரம்மசாலா பொடி – ½ டீஸ்பூன்
- மசாலாப்பொடி – 1 டீஸ்பூன்
- இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- முந்திரி பருப்பு – 5
- புதினா, பட்டை, சோம்பு, எண்ணெய் – தாளிக்க
- பிரியாணி சாமான், ஏலக்காய் – தாளிக்க
- Directions
- ஆனியன் குருமா – Onion Kuruma செய்முறை:
- ஒரு கடாயில் புதினா, பட்டை சோம்பு, மற்றும் பிரியாணி சாமான்களை சேர்த்து தாளிக்கவும்.
- அதில் நறுக்கிய பல்லாரி, பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும்,
- இஞ்சி பூண்டு விழுது, மசாலா பொடி, கார மசாலா பொடி மற்றும் உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.
- பிறகு தேங்காய், முந்திரி பருப்பு, சோம்பு, சேர்த்து நன்றாக அரைத்து, அதையும் குருமாவில் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் ஆனியன் குருமா – Onion Kuruma தயாராகி விடும்.
Yield4
Serving size: 1cup
Calories per serving: 250
Fat per serving: 12
ஆனியன் குருமா (Onion Kuruma) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்