பாசி பருப்பு பாயசம்Published: 2020-01-08Prep time: 40 mins Cook time: 30 mins Total time: 1 hr 10 mins
Summaryபாசி பருப்பு பாயசம் – Pasi Paruppu Payasam

- Ingredients
- பாசி பருப்பு – 75 கிராம்
- பச்சரிசி – 25 கிராம்
- நெய் – 25 கிராம்
- பால் – 150 மில்லி
- வெல்லம் – 150 கிராம்
- முந்திரி பருப்பு – 10
- உலர்ந்த திராட்சை – 10
- ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன்
- தேங்காய் துருவல் – தேவையான அளவு
- Directions
- பாசி பருப்பு பாயசம் – Pasi Paruppu Payasam செய்முறை:-
- பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். மிக்ஸியில் தண்ணீர் விடாமல் நன்றாக நெறுநெறுப்பாக அரைக்கவும்.
- குக்கரில் ஒரு டிஸ்பூன் நெய் ஊற்றி, அதில் பாசிப்பருப்பை போட்டு வறுத்துக் கொள்ளவும்,
- நன்கு பொன்நிறமாக வறுத்த பிறகு அத்துடன் பச்சரிசியை போட்டுவும்.
- அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து மூன்று விசில் வரும் வரை வேக விடவும்.
- விசில் இறங்கிய உடன் வெல்லத்தை போட்டு கிளறவும்.
- ஒரு டம்ளர் காய்ச்சிய பாலை ஊற்றவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுக்கவும்.
- அதன்பின் உலர் திராட்சை போட்டு வறுக்கவும். அத்துடன் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் பொடி போட்டு லேசாக வதக்கவும்.
- இதனை பாயாசத்தில் ஊற்றி நன்றாக கிளறி இறக்கினால் பாசி பருப்பு பாயசம் தயார்.
Yield5
Serving size: 5 கப்
Calories per serving: 150
Fat per serving: 10