மிளகு காராப்பூந்தி – Pepper Kara BoondiPublished: 2017-05-24Prep time: 10 mins Cook time: 30 mins Total time: 40 mins
Summaryமிளகு காராப்பூந்தி – Pepper Kara Boondi

- Ingredients
- கடலைமாவு – 5 கப் (250கி)
- அரிசி மாவு – 1 கப் (50கி)
- பெருங்காயம் – ½ டீஸ்பூன்
- மிளகு பொடி – 1 டீஸ்பூன் (தேவையான அளவு)
- கருவேப்பில்லை – சிறிதளவு
- பூண்டு – சிறிதளவு
- நிலக்கடலைபருப்பு – 50கி
- எண்ணெய் – 200மி
- Directions
- மிளகு காராப்பூந்தி – Pepper Kara Boondi செய்முறை :-
- கடலைமாவு, அரிசிமாவு, பெருங்காயம், உட்பு சேர்த்து கலக்கவும், அதில் தண்ணீர் ஊற்றி தோசைமாவு பாதத்திற்கு வைத்துக் கொள்ளவும்.
- அதை அறி கரண்டியில் ஊற்றி பார்த்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி சூடான பிறகு அதில் அறி கரண்டியை பக்கத்தில் வைத்து மாவை ஊற்ற வேண்டும்.
- மாவு எண்ணெய்யில் உருண்ட உருண்டையாக விழும், அதை நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதே எண்ணெய்யில் நிலகடலை, பூண்டு மற்றும் கருவேப்பில்லை பெறித்துக் எடுத்து, இவை அனைத்தையும் ஒரே பாத்திரத்தில் போட்டு கொள்ளவும்.
- அதில் மிளகு பொடியை தேவைக்கு ஏற்ப போட்டு நன்றாக கலக்கவும். இப்பொழுது காரமான மிளகு காராப்பூந்தி (Pepper Kara Boondi) ரெடி.
Yield10
Serving size: 1 கப்
Calories per serving: 250
Fat per serving: 12g
மிளகு காராப்பூந்தி – Pepper Kara Boondi சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்