Search




Madurai Kitchen Pidi Kozhukattai

பிடி கொழுக்கட்டை – Pidi Kozhukattai

4823
பிடி கொழுக்கட்டைPrep time: 30 mins Cook time: 40 mins Total time: 1 hr 10 minsபிடி கொழுக்கட்டைSummaryவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் மட்டுமல்ல, மாலை நேர உணவாகவும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு பிடித்த பலகாரம் இந்த கொழுக்கட்டை. பிடி கொழுக்கட்டையை நன்கு ஆற வைத்து, இரண்டு நாள் வரையிலும் வைத்து சாப்பிடலாம் கெட்டு போகாது.










    Ingredients

  • அரிசி மாவு – 250கி (1கப்)
  • வெல்லம் – 250 கி (1 கப்)
  • தேங்காய் – 1/2 கப் (நறுக்கியது)
  • எள் – 2 ஸ்பூன்
  • நெய் – 2 ஸ்பூன்
  • ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன்
  • தண்ணீர் – 1 கப்
    Directions

  1. பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி வீடியோ பாருங்கள்.
  2. முதலில் தேங்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் (அ) துருவிக் கொள்ளவும்.
  3. தேங்காய் துண்டுகளை ஒரு கடாயில் சிறிதளவு நெய்யை ஊற்றி லேசாக வதக்கிக் கொள்ளவும்.
  4. நெய்யில் வறுத்த தேங்காயை கொழுக்கட்டையுடன் சாப்பிடும் போது ருசியாக இருக்கும்.
  5. பிறகு வெல்லத்தை (ஒரு கப் வெல்லம் = ஒரு கப் தண்ணீர்) ஒரு கடாயில் போட்டு அளந்து வைத்திருக்கும் தண்ணீரை ஊற்றி வெல்லப் பாகு காய்ச்ச வேண்டும்.
  6. பின்பு பாகுவை வடிகட்டியால் இறுத்துக் கொள்ளவும். எள்ளையும் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  7. ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதன் பிறகு வறுத்த எள் & ஏலக்காய் தூள் போட்டு, அதனுடன் வதக்கிய தேங்காயையும் சேர்த்து நன்கு கிளறவும்.
  8. பிறகு சூடான வெல்ல பாவை கொஞ்சம் கொஞ்சமாக அரிசி மாவுடன் ஊற்றி நன்கு கிளறவும். மாவு கையில் ஓட்டாதவாறு நன்கு பிசையவும்.
  9. மாவை சிறு உருண்டையாக உருட்டி அதனை கொழுக்கட்டை வடிவிற்கு கைகளிலேயே பிடித்துக் கொள்ளவும்.
  10. அனைத்து மாவையும் கொழுக்கட்டைகளாக பிடித்துக் கொள்ளவும். பிறகு கொழுக்கட்டை களை இட்லி தட்டில் ஒன்றன் பின் ஒன்றாக வைத்து இட்லி கொப்பரை (அ) ரைஸ் குக்கரில் வைத்து அவிக்கவும்.
  11. கொழுக்கட்டை வேக அதிக நேரம் தேவைப்படும், அதனால் தண்ணீர் அதிகம் ஊற்றி வேக விடவும்.
  12. பிறகு ஒரு குச்சி (அ) கத்தியால் கொழுக்கட்டையை குத்திப் பார்க்கும் போது மாவு ஓட்டாமல் இருந்தால் கொழுக்கட்டை தயாராகி விட்டது.
  13. இப்பொழுது கொழுக்கட்டையை இட்லி தட்டில் இருந்து எடுத்து விடலாம்.
  14. ருசியான, சூடான பிடி கொழுக்கட்டை ரெடி.

Yield6

Serving size: 4
Calories per serving: 156
Fat per serving: 20g

பிடி கொழுக்கட்டை (Pidi Kozhukattai) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும். 
 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *