பொடி தோசை Published: 2017-08-07Prep time: 8 hrs 0 min Cook time: 35 mins Total time: 8 hrs 35 mins
Summaryபொடி தோசை – Podi Dosai

- Ingredients
- தோசை மாவு – 1 கப்
- (இட்லி அரிசி – 4 கப், உளுந்து – 1 கப்)
- உளுந்து – 200 கிராம்
- எண்ணெய் (அ ) நெய் – 50 கிராம்
- வத்தல் – 7
- கருவேப்பிலை – சிறிதளவு
- பூண்டு – ஒரு பெரிய பூண்டு
- பெருங்காயம் – 1 டீஸ்பூன்
- Directions
- பொடி தோசை (Podi Dosai) செய்முறை:
- இட்லி அரிசி உளுந்து இதை தனித்தனியாக ஊற வைக்க வேண்டும்.
- இட்லி அரிசியை நன்றாக (வழுவழுப்பாக ஆக கூடாது) அரைக்க வேண்டும். பிறகு பொங்கும் வரை உளுந்தை நன்றாக அரைக்கவும்.
- உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும். பிறகு 6 மணி நேரம் கழித்து தோசை மாவு பதத்திற்கு வந்து விடும்.
- ஒரு கடாயில் உளுந்தை போட்டு சிவக்கும் வரை வறுக்கவும்.
- பிறகு இன்னொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் 7 வத்தல், பூண்டு பற்கள், கருவேப்பிலை போட்டு வறுக்கவும். சிறிதளவு பெருங்காயம் சேர்க்கவும்.
- பிறகு வறுத்து வைத்துள்ள அனைத்தையும், உளுந்துடன் சேர்த்து மிக்சியில் போட்டு (தண்ணீர் விட கூடாது) பொடி பண்ண வேண்டும். இப்பொழுது பொடி தயார்.
- தோசைக்கல்லில் தோசை மாவை லேசாக ஊற்றி அதன் மேல் இந்த பொடியை பரவலாக தூவி தோசையை சுற்றியும் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்ற வேண்டும்.
- பிறகு தோசையை பாதியாக மடித்து வேக வைத்து எடுத்தால் பொடி தோசை தயார்.
- இதற்கு சாம்பார், சட்னி வைத்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
Yield6
Serving size: 3
Calories per serving: 250
Fat per serving: 12g