இறால் 65Published: 2020-01-07Prep time: 30 mins Cook time: 20 mins Total time: 50 mins
SummaryFavourite Prawn 65 – இறால் 65 ( இராட்டு 65 ) easy way to prepare at home.

- Ingredients
- இறால் – 500 கிராம்
- மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
- கொத்தமல்லி தூள் – ½ டீஸ்பூன்
- கரம் மசாலா – ½ டீஸ்பூன்
- மிளகு, சீரகம் தூள் – – ½ டீஸ்பூன்
- சிகப்பு மிளகாய் தூள் – 1 டிஸ்பூன்
- கார்ன் பிளவர் மாவு – 2 டிஸ்பூன்
- உப்பு, எண்ணெய் – 100 கிராம்
- எலுமிச்சை சாறு – 1 டிஸ்பூன்
- Directions
- இறால் 65 (Prawn 65) செய்முறை:-
- இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும், இறாலை செய்யும் போது இறால்கள் தண்ணீராக இருக்கக்கூடாது.
- அதில் தேவையான அளவு மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா, மிளகு, சீரகம் தூள், சிகப்பு மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.
- மசாலாவை நன்றாக கலக்கி இறாலில் உள்ள தண்ணீரை எடுப்பதற்காகவும் நன்கு மசாலா சேர்வதற்காகவும் ஒரு 5 அ 8 நிமிடங்கள் வேகவிடவும். அதிக நேரம் வேகவிட கூடாது.
- இறாலில் உள்ள தண்ணீர் வற்றா விட்டால் வடிகட்டவும்.
- அதில் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், கார்ன் பிளவர் மாவு சேர்த்து , மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- ஒரு அரை மணிநேரம் இறாலை நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி குறைந்த வெப்பநிலையில் இறாலை பொறித்து எடுக்கவும்
- பொறித்து எடுத்த எடுத்த இறால் 65யில் லேசாக லெமன் சாற்றை பாரவலாக ஊற்றிசாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
Yield4
Serving size: 20 pieces
இறால் 65 (Prawn 65) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.