Search




Madurai Kitchen Puliyodharai

புளியோதரை – Puliyodharai

1483
புளியோதரைPrep time: 30 mins Cook time: 20 mins Total time: 50 minsபுளியோதரைSummaryபுளியோதரை – Puliyodharai










    Ingredients

  • அரிசி – 1 கப் (400 கிராம்)
  • புளி – 100 கிராம்
  • மல்லி – 2 டீஸ்பூன்
  • வத்தல் – 10 எண்ணம்
  • வெந்தயம் – 1 டீஸ்பூன்
  • கடலைப்ப்ருப்பு – 3 டீஸ்பூன்
  • கருவேப்பிலை – சிறிது
  • நிலக்கடலை – சிறிது
  • முந்திரிபருப்பு – 10 எண்ணம்
  • மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
    Directions

  1. புளியோதரை (Puliyodharai) செய்முறை வீடியோ…
  2. அரிசியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. வெந்தயம், மல்லி, கடலைபருப்பு, வத்தல் போன்றவற்றை கடாயில் போட்டு பொறித்து எடுத்துக் கொள்ளவும். அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. இதை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிவைத்து கொண்டு புளியோதரை செய்யும்போது பயள்படுத்திக் கொள்ளலாம்.
  5. புளியை ஊர வைத்து, புளிச்சாறு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  6. ஒரு தட்டில் வத்தலை கிள்ளி வைத்துக் கொள்ளவும். அதில் கருவேப்பிலையும் வைத்துக்கொள்ளவும்.
  7. ஒரு பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி அதில் கடுகு போட்டு தாளித்து அதில் 1 டீஸ்பூன் கடலைப்பருப்பை போடவும்.
  8. வத்தல், கருவேப்பிலையும் போடவும்.பிறகு பெருங்காயம் போட்டு புளிக்கரைச்சலை ஊற்ற வேண்டும்.பிறகு மஞ்சள் பொடி போடவும். அதை சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  9. அதில் அரைத்து வைத்துள்ள பொடியை 1 ½ டீஸ்பூன் போட்டு, 5 நிமிடம் வேக வைக்கவும்.
  10. பிறகு சிறிது நல்லெண்ணையை ஊற்றி இறக்கி வைத்துவிட வேண்டும்.
  11. ஒரு கடாயில் நிலக்கடலை வருத்துக் கொள்ளவும். பிறகு அதன் தோல் நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  12. முந்திரி பருப்பையும் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். செய்து வைத்துள்ள ரைஸ்யை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  13. அதில் புளிகாய்ச்சலை ஊற்றி கிளரவும் பிறகு அதன் மேல் நிலக்கடலை, முந்திரி பருப்பையும் போட்டு கிளரவும்.
  14. இப்பொழுது புளியோதரை ரைஸ் ரெடியாகி விட்டது.
  15. இதற்கு உருளைக்கிழங்கு வருவல், தேங்காய் சட்னி செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

Yield5

Serving size: 1 Plate
Calories per serving: 180
Fat per serving: 12g

புளியோதரை – Puliyodharai சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *