கேப்பை புட்டு – Ragi PuttuPublished: 2017-08-04Prep time: 20 mins Cook time: 15 mins Total time: 35 mins
Summaryகேப்பை புட்டு – Ragi Puttu

- Ingredients
- கேப்பை மாவு – 1கப் (250 கிராம்)
- வெல்லம் – ½ கப் (100 கிராம்)
- சர்க்கரை – 50 கிராம்
- எள் – 25 கிராம்
- தேங்காய் துருவல் – 1கப் (½ மூடி)
- நிலக்கடலை பருப்பு – 50 கிராம்
- Directions
- கேப்பை புட்டு (Ragi Puttu)செய்முறை:
- கேப்பை மாவை எடுத்து அதில் சூடான தண்ணீர் தெளித்து மாவை உதிரியாக பிசைந்து கொள்ளவும்.
- மாவு உதிரியாக இருப்பதற்கு மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும். கேப்பை மாவு உதிரியாக இருக்க வேண்டும்.
- இட்லி தட்டில் பெரிய துணியை போட்டு அதில் மாவை இட்டு, 10 நிமிடம் வேக வைக்கவும்
- வெல்லத்தை மாவு போல ஆக்க வேண்டும், அதற்கு வெல்லத்தை சிறிய சிறிய துண்டாக ஆக்கி, அதை மிக்சியில் ஒரு சுற்று சுற்றினால் போதும்.
- எள்ளை, நிலக்கடலை பருப்பை ஒரு கடாயில் போட்டு வறுத்துக்கொள்ளவும், அதையும் நொறு நொறுப்பாக திரித்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல், சர்க்கரை போட்டு கொள்ளவும்.
- சூடான நிலையில் உள்ள கேப்பை புட்டுடன், தேங்காய் துருவல், சர்க்கரை, அரைத்த நிலக்கடலை மற்றும் எள்ளை நன்றாக கலக்கி கொள்ளவும். அதை 10 நிமிடம் மூடி வைக்கவும். கேப்பை மாவு புட்டு ரெடியாகிவிட்டது.
Yield4
Serving size: 1கப்
Calories per serving: 250
Fat per serving: 12g
கேப்பை புட்டு (Ragi Puttu) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்