ரவா தோசைPublished: 2017-05-22Prep time: 30 mins Cook time: 10 mins Total time: 40 mins
Summaryரவா தோசை – Rava Dosai

- Ingredients
- ரவை – 1 கப் (100 கிராம்)
- மைதா – 1 கப் (100 கிராம்)
- அரிசிமாவு – ½ கப் (50 கிராம்)
- மிளகு – 10
- சீரகம் – ½ டீஸ்பூன்
- பெருங்காயம் – ¼ டீஸ்பூன்
- கருவேப்பிலை – சிறிதளவு
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- Directions
- மைதா, ரவை, அரிசிமாவு இவை மூன்றையும் ஒரு கப் எடுத்துக்கொள்ளவும். இதில் இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
- அதில் பெருங்காயம், உப்பு, மிளகு, சீரகம் சேர்த்துக் கொள்ளவும்.
- பிறகு கருவேப்பிலை,கொத்தமல்லி இலை போட்டு நன்றாக கலக்கவும், ½ மணி நேரம் ஊற வைக்கவும்.
- தோசைக்கல்லில் கலவை செய்துள்ள மாவை பரவலாக ஊற்ற வேண்டும், கரண்டி வைத்து தேய்க்கக்கூடாது.
- பிறகு சுற்றி எண்ணெய்யை ஊற்றி வேக வைக்கவும், பிறகு தட்டைப் போட்டு மூடவும். பின்பு பாதியாக மடித்துக் கொள்ளவும்.
- நன்றாக மொரு மொரு என்று வரும் வரை வேக வைக்கவும்.
- பிறகு ரவா தோசை வீட்டிலேயே தயார் ஆகிவிட்டது.
- இதற்கு சட்னி, சாம்பார் வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
Yield3
Serving size: 3
Calories per serving: 180
Fat per serving: 12g