ரவா கேசரிPublished: 2017-05-03Prep time: 10 mins Cook time: 15 mins Total time: 25 mins
Summaryரவா கேசரி – Rava Kesari

- Ingredients
- ரவை – 1 கப் (100 கிராம்)
- சர்க்கரை – ¾ கப் (125 கிராம் (அ) 150 கிராம்)
- ஏலக்காய் – 2 எண்ணம்
- கேசரி பவுடர் – தேவையான அளவு
- நெய் – 10 கிராம்
- கிஸ்மிஸ் – 5 Piece
- முந்திரி பருப்பு – 10 Piece
- Directions
- ரவா கேசரி (Rava Kesari) செய்முறை வீடியோ…
- முந்திரியை சிறிய சிறிய துண்டாக கட் செய்து வைத்து கொள்ளவும்.
- ஏலக்காய்யை பொடி செய்து வைத்து கொள்ளவும்.
- ரவையை சிறிது நெய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் 2 கப் (200 கிராம) தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு கப் ரவைக்கு அதற்கு இரண்டு கப் அளவு தண்ணீர் சரியான அளவாக இருக்கும்.
- அதில் கேசரி பவுடர் கலருக்கு தேவையான அளவு போடவும்.
- தண்ணீர் கொதித்த பிறகு அதில் ரவையை போட வேண்டும்.
- ரவையை போடும் பொழுது ஸ்டவ்வைக் குறைத்துக் கொள்ளவும். கட்டிகள் இல்லாமல் கிண்டவும். அதில் ஏலக்காய் பொடியை சேர்க்கவும்
- ரவை வெந்தவுடன் அதனுடன் சர்க்கரையைச் சேர்த்துக் கிண்டவும்.
- ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரியையும், கிஸ்மிஸ்யையும் வறுத்து எடுத்து, கேசரிவுடன் சேர்த்துக் கிண்டவும்.
- இறக்கும்போது நெய்விட்டு இறக்கவும். நெய் மணத்துடன் சூடான ரவா கேசரி ரெடி.
Yield3
Serving size: 1 cup
Calories per serving: 150
Fat per serving: 12g