அரிசி மாவு களிPublished: 2019-01-07Prep time: 10 mins Cook time: 20 mins Total time: 30 mins
Summaryஅரிசி மாவு களி – Rice Flour Kali

- Ingredients
- பச்சரிசி மாவு – 1 ¼ கப்
- வெல்லம் (அ)கருப்பட்டி – 100 கிராம்
- ஏலக்காய், சுக்கு, மிளகு – சிறிதளவு
- நல்லெண்ணெய் – தேவைக்கு
- உப்பு – சிறிதளவு
- Directions
- அரிசி மாவு களி – Rice Flour Kali செய்முறை :-
- ஒரு கப் பச்சரிசி மாவுக்கு 2 ½ கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதைகொதிக்க வைக்கவும்.
- அதில் 1 டீஸ்பூன் அளவு பச்சரிசி மாவை எடுத்துக் தண்ணீர் கரைத்துக் கொள்ளவும்
- தண்ணீர் கொதித்த உடன் சிறிதளவு உப்பு, கரைத்த மாவை ஊற்றி கிண்டவும். பிறகு பச்சரிசி மாவை சிறிது சிறிதாக போட்டு மிதமான வெப்பநிலையில் வைத்துதான் கிண்ட வேண்டும்.
- களியை அடிவர கிண்டவும் 6 முதல் 8 நிமிடத்தில் களி நன்றாக வெந்துவிடும் கையில் தண்ணீர் தோட்டு களியை தோட்டு பார்த்தால் கையில் ஒட்டக்கூடாது இந்த நிலையில் களியை இறக்கி விடாலாம். கையில் ஒட்டினால் சிறிது நேரம் வேக வைத்து இறக்கவும்.
- கருப்பட்டி பாகு செய்யும் முறை:- கருப்பட்டியை சிறு சிறு துண்டாக உடைத்து கொள்ளவும் அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் மாவைபோட்டு தண்ணீர் ஊற்றி தண்ணியாக கரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி பாகுவை உற்றி கொதிக்க உடன் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி அதில் மிளகு பொடி, சுக்கு பொடி மற்றும் ஏலக்காய் பொடி இவைஅனைத்தையும் போட்டு கிண்டவும். கொதித்து வந்ததும் கருப்பட்டி பாகுவை இறக்கி விடவும்.
- களியை எடுத்து வைத்து அதன் நடுவில் கருப்பட்டி பாகுவை ஊற்றி அதன் மேல் நல்லெண்ணெய்யை ஊற்றி சுடசுட சாப்பிட்டால் நன்றாக இருக்கும் சுவையான அரிசிமாவு களி ரெடியாகி விட்டது.
Yield3
Serving size: 1 cup
Calories per serving: 250
Fat per serving: 18g