எள்ளு சீடைPublished: 2017-08-04Prep time: 48 hrs 0 min Cook time: 30 mins Total time: 48 hrs 30 mins
Summaryஎள்ளு சீடை – Ellu Seedai

- Ingredients
- பச்சரிசி – 1 கிலோ
- வெல்லம் – ½ கிலோ
- ஏலக்காய் – 4
- எள் – 2 டீஸ்புன்
- எண்ணெய் – 500 மி
- Directions
- எள்ளு சீடை – Ellu Seedai செய்முறை :-
- மாவு செய்முறை :- பச்சரிசியை ஒரு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
- தண்ணீர் இல்லாமல் அரிசியை நன்றாக வடித்துக் கொள்ளவும்
- நன்றாக ஈரஅரிசிக்கு ரைஸ் மில்லில் அரைக்கவும் (அல்லது) மிக்ஸியில் தண்ணீர் விடாமல் நன்றாக வழு வழுப்பாக அரைக்கவும்
- பாகு செய்யும் முறை:- வெல்லத்தை நன்றாக முனிக்கி எடுத்துக் கொள்ளவும்.அதில் (¼ டம்ளர்) சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஸ்டவ்வில் வைக்கவும் வெல்லம் கரைந்து, கம்பி பாகு வந்தவுடன் அதை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- மாவுடன் பாகுவை ஊற்ற வேண்டும் அதில் 2 டீஸ்புன் எள்ளை வருத்துபோட வேண்டும்.
- அதில் ஏலக்காய் பொடியையும் போடவும். இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
- வெள்ளை துணியை போட்டு மூடவும். இரண்டு நாட்கள் கழித்து எள் சீடை மாவு தயாரகி விடும்.
- மாவை எடுத்து சிறிய உருண்டையாக உருட்டி கொள்ளவும். ஒரு காடாயில் எண்ணெய்யை ஊற்றி சூடான பிறகு சிம்மில் வைத்து ஒவ்வொறு உருண்டையாக போடவும்.
- அவை எல்லாம் ஒன்றோடு ஒன்று ஒட்டமல் போட்டு மொறு மொறு என பெறித்து எடுக்க வேண்டும். மாவை பிரிட்ஜ்யில் எடுத்து வைத்து ஒரு மாதத்திற்கு மேல் பயன்படுத்தலாம்.
- தேவைபடும்பொழுது அதை வெளியே எடுத்துவைத்து குளிர்த்த தன்மை போன பிறகு பொறித்து சாப்பிட்டலாம். அருமையான எள்ளு சீடை தயார்.
Yield150
Serving size: 10
Calories per serving: 250
Fat per serving: 12g