சுவரொட்டி வறுவல் – Suvarotti Varuval Published: 2020-08-02Prep time: 20 mins Cook time: 15 mins Total time: 35 mins
Summaryசுவரொட்டி வறுவல் – Suvarotti Varuval

- Ingredients
- சுவரொட்டி – 2 எண்ணம்
- சின்ன வெங்காயம் – 10-12 எண்ணம்
- இஞ்சி பூண்டுவிழுது – 1 டீஸ்பூன்
- மசாலா பொடி – 1 டீஸ்பூன்
- கரம் மசாலா பொடி – ½ டீஸ்பூன்
- பெருஞ்சீரகம் – ½ டீஸ்பூன்
- தேங்காய் – சிறிதளவு
- நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
- தாளிக்க: எண்ணெய், பட்டை, சோம்பு, கடுகு உளுந்து, கிராம்பு, இலவங்கப்பட்டை இலை கருவேப்பில்லை, புதினா, கொத்தமல்லி இலை – சிறிதளவு
- Directions
- சுவரொட்டி வறுவல் – Suvarotti Varuval செய்முறை :-
- சுவரொட்டி வாங்கும் பொழுது அதை வெட்டாமல் வாங்கிக் கொள்ளவும்.
- சுவரொட்டியை சுத்தம் செய்த, பிறகு, சிறிது தண்ணீர் ஊற்றி 2 விசில் வைத்து இறக்கவும்.
- சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- .தேங்காய், பெருஞ்சீரகம் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து, அதில் பட்டை, கிராம்பு, இலவங்கப்பட்டை, புதினா மற்றும் சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
- அதில் சுவரொட்டியை வேக வைத்த தண்ணீருடன் போட்டு வதக்கவும் சிறிது நேரத்தில் கலர் மாறிவிடும், அத்துடன் மசாலா பொடி, கரம் மசாலா பொடி தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும் மசாலா வாடை போகும் வரை வதக்கவும்.
- 1 டீஸ்பூன் அதில் தேங்காய் பெருஞ்சீரகம் அரைத்து வைத்த கலவையை சேர்த்து வதக்கவும்,
- அதில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி இறக்கி வதக்கவும். மேலே கொத்தமல்லி, புதினா தூவி இறக்கி விடவும் சுவையான சுவரொட்டி வறுவல் ரெடி..
- தோசை, சாதம், சப்பாத்தி மற்றும் இடியாப்பம் இவை அனைத்திற்கும் மிகவும் நன்றாக இருக்கும்.
Yield2
Serving size: 1 Cup
Calories per serving: 300
Fat per serving: 12