தேங்காய் பால் முருக்குPublished: 2017-05-25Prep time: 3 hrs 0 min Cook time: 30 mins Total time: 3 hrs 30 mins
Summaryசுவையான தேங்காய் பால் முருக்கு – Thengai Paal Murukku, குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

- Ingredients
- குண்டு பச்சரிசி – 1 கிலோ
- உளுந்து – 200 கிராம்
- எள் – 2 டீஸ்புன்
- பெருங்காயம் – ¼ டீஸ்புன்
- உப்பு – சிறிதளவு
- எண்ணெய் – 500மி
- தேங்காய் – 1
- Directions
- முருக்கு (Thengai Paal Murukku) செய்முறை வீடியோ…
- உளுந்தை பொன் நிறமாக வறுத்தெடுத்து, குண்டு பச்சரிசியுடன் நன்றாக கலந்து விடவும், இதை நன்றாக அரைத்து கொள்ளவும் (ரைஸ் மில்லில் அரைத்தால் நன்கு அரைபடும்).
- மாவு வழுவழுப்பாக இருக்க வேண்டும்.
- தேங்காய்யில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதை வடிகட்டி கெட்டியான பால்போல் இருக்குமாறு எடுத்துக் கொள்ளவும்.
- தேங்காய் பாலை லோசான சுட்டில் ஒரு கொதிக்க வைத்து இருக்கவும்.
- எள்ளை வருத்து வைத்து கொள்ளவும்.
- மாவை எடுத்து கொள்ளவும், அதில் எள், தேவையான அளவு உப்பு, பெருங்காயம் போட்டு கலந்துக் கொள்ளவும்.
- ஒரு கரண்டி சூடான எண்ணெய் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
- அதில் தேங்காய் பாலை ஊற்றி முருக்கு மாவை பிசைந்துக் கொள்ளவும்.
- மாவு கையில் ஒட்டதாபடி பிசைந்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி, மாவை முருக்கு உழக்கில் வைத்துக் கொள்ளவும்.
- சூடான பிறகு முருக்குமாவை வட்ட வட்டமாக சுற்றி, எண்ணெயில் போட்டு பொன்நிறமாக பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது தேங்காய் பால் முருக்கு மொறு மொறுப்பாக இருக்கும்.
Yield10
Serving size: 6
Calories per serving: 200
Fat per serving: 12g