தேங்காய் பூரணம் கொழுக்கட்டை Published: 2017-11-18Prep time: 45 mins Cook time: 30 mins Total time: 1 hr 15 mins
Summaryதேங்காய் பூரணம் கொழுக்கட்டை – Thengai Puranam Kozhukattai

- Ingredients
- அரிசி மாவு – 200கி
- வெல்லம் – 100கி
- தேங்காய் – 1/2 கப் (துருவல்)
- எள் – 50கி
- ஏலக்காய் தூள் – 4
- தண்ணீர் – சிறிதளவு
- பொரிகடலை – 50கி
- Directions
- தேங்காய் பூரணம் கொழுக்கட்டை செய்வது எப்படி வீடியோ பாருங்கள்:
- முதலில் வறுத்த எள்ளை நெறுநெறுப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக்கொள்ளவும்.
- பொரிகடலை நெறுநெறுப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மாவை பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் வெல்லத்தை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும். பின்பு பாகுவை வடிகட்டியால் இறுத்துக் கொள்ளவும்.
- மிதமான சூட்டில் வெல்லப்பாகுவில் அரைத்த எள், பொரிகடலை, ஏலக்காய் பொடி மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கலக்கவும். பூரணம் தயாராகி அதை கொழுக்கட்டை செய்வதற்கு எடுத்துக் கொள்ளவும்.
- மாவை சிறுசிறு உருண்டையாக உருட்டி அதை வட்ட வடிவில் லேசாக தட்டிக் கொள்ளவும். அதன் ஓரத்தில் பூரணத்தை வைத்து மடக்கிக் கொள்ளவும். கொழுக்கட்டையை எந்த வடிவில் வேண்டுமானலும் செய்து கொள்ளவும்.
- பிறகு அதை இட்லி கொப்பரையில் அல்லது ரைஸ் குக்கரில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் தட்டுகளை வைத்து கொழுக்கட்டையை 10 – 15 நிமிடங்கள் வேக விடவும்.
- பிறகு ஒரு குச்சி (அ) கத்தியால் கொழுக்கட்டையை குத்திப் பார்க்கும் போது மாவு ஓட்டாமல் இருந்தால் கொழுக்கட்டை தயாராகி விட்டது.
- இப்பொழுது கொழுக்கட்டையை இட்லி தட்டில் இருந்து எடுத்து விடலாம். சுவையான தேங்காய் பூரணம் கொழுக்கட்டை ரெடி
Yield15
Serving size: 1
Calories per serving: 250
Fat per serving: 12g
தேங்காய் பூரணம் கொழுக்கட்டை (Thengai Puranam Kozhukattai) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.