Search




திணை பாயசம் – Thinai Payasam

7391
திணை பாயசம்Prep time: 10 mins Cook time: 30 mins Total time: 40 minsதிணை பாயசம்SummaryThinai Rice / Foxtail Millet உடல் எடையை குறைக்கும். புரதம் மற்றும் இரும்பு நிறைந்த உணவு, எளிமையான குறைந்த நேரத்தில் செய்து முடிக்கும் சுவையான பாயசம்.










    Ingredients

  • திணை அரிசி – 50 கிராம்
  • பாசி பருப்பு – 25 கிராம்
  • நெய் – 25 கிராம்
  • பால் – 50 மில்லி
  • வெல்லம் – 100 கிராம்
  • முந்திரி பருப்பு – 10
  • உலர்ந்த திராட்சை – 10
  • ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன்
  • தேங்காய் துருவல் – தேவையான அளவு
    Directions

  1. திணை பாயசம் (Thinai Payasam) செய்முறை வீடியோ…
  2. குக்கரில் ஒரு டிஸ்பூன் நெய் ஊற்றி, அதில் திணையை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
  3. அத்துடன் பாசிப்பருப்பையும் போட்டு லேசாக வறுக்கவும்.
  4. அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து மூன்று விசில் வரும் வரை வேக விடவும்.
  5. விசில் இறங்கிய உடன் வெல்லத்தை போட்டு கிளறவும்.
  6. ஒரு டம்ளர் காய்ச்சிய பாலை ஊற்றவும்.
  7. ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுக்கவும்.
  8. அதன்பின் உலர் திராட்சை போட்டு வறுக்கவும். அத்துடன் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் பொடி போட்டு லேசாக வதக்கவும்.
  9. இதனை பாயசத்தில் ஊற்றி நன்றாக கிளறி இறக்கினால் தினை பாயசம் தயார்.

Yield4

Serving size: 1 கப்
Calories per serving: 200
Fat per serving: 12g

திணை பாயசம் (Thinai Payasam) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *