Search




Madurai Kitchen Tomato Dosa

தக்காளி தோசை – Tomato Dosa

9727
தக்காளி தோசைPrep time: 20 mins Cook time: 30 mins Total time: 50 minsதக்காளி தோசைSummaryதக்காளி தோசை – Tomato Dosa










    Ingredients

  • தோசை மாவு – 1 கப்
  • தக்காளி – 5, பூண்டு – 10
  • இஞ்சி – சிறிய அளவு,
  • சிவப்பு மிளகாய் வத்தல் – 7 (அ) 8
  • பெருங்காயம் – ½ டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு
  • கருவேப்பிலை, கொத்தமல்லி இலை
    Directions

  1. தக்காளி தோசை – Tomato Dosa செய்முறை:
  2. முதலில் நன்கு பழுத்த தக்காளி, இஞ்சி, பூண்டு, மிளகாய் வத்தல், பெருங்காயம் தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் மையாக அரைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் இரண்டு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்திருக்கும் தக்காளியை ஊற்றவும்.
  4. இதை 5-10 நிமிடங்கள் வரை பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும். இந்த வதக்கிய பொருட்களை சூடு ஆறிய பிறகு தோசை மாவில் சேர்த்து கலக்கவும்.
  5. சிறு சிறு துண்டாக நறுக்கி கருவேப்பிலை, கொத்தமல்லி இலை மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. தோசைக்கல்லில் செய்துள்ள மாவை பரவலாக ஊற்ற வேண்டும்.
  7. பிறகு சுற்றி எண்ணெய்யை ஊற்றி வேக வைத்து எடுக்கவும். இப்பொழுது சூடான தக்காளி தோசை ரெடி.

Yield5

Serving size: 2
Calories per serving: 180
Fat per serving: 12g

தக்காளி தோசை (Tomato Dosa) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.

 

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *