Search




Madurai Kitchen Uluntham kali

உளுந்தங்களி – Uluntham kali

11372
உளுந்தங்களிPrep time: 30 mins Cook time: 30 mins Total time: 60 minsஉளுந்தங்களிSummaryஉடல் சூட்டை தணிக்கும். உன்னத உணவு உளுந்தங்களி (Uluntham kali) சனி நீராடு என்பது போல் வாரம் ஒரு முறையேனும் உண்ண வேண்டிய உணவு உளுந்தங்களி. பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்தவுடன் கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்து உளுந்தங்களி.










    Ingredients

  • கருப்பட்டி – 150 கிராம்
  • நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
  • உளுந்தம்மாவு – 150 கிராம்
  • உளுந்தம் பருப்பு – 200கிராம்
  • பச்சரிசி – 1 கிலோ
    Directions

  1. உளுந்தங்களி (Uluntham kali) செய்முறை வீடியோ…
  2. உளுந்தங்களி மாவு செய்முறை:-
    உளுந்தை பொன் நிறமாக வறுத்தெடுத்து, குண்டு பச்சரிசியுடன் நன்றாக கலந்து விடவும், இதை நன்றாக அரைத்து கொள்ளவும் (ரைஸ் மில்லில் அரைத்தால் நன்கு அரைபடும்). மாவு வழுவழுப்பாக இருக்க வேண்டும்.
  3. கருப்பட்டியை சிறு துண்டாக உடைத்து கொள்ளவும். ஒரு கப் மாவிற்கு 2 கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.
  4. அளந்து வைத்துள்ள தண்ணீரை ஒருகடாயில் ஊற்றி அதில் கருப்பட்டியை போட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  5. வடிகட்டிய கருப்பட்டி தண்ணீரை ஊற்றி, அதில் கொதி வந்த பிறகு 1 கரண்டி மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து, தண்ணீயாக கரைக்கவும், அதை கருப்பட்டிபாகுவில் ஊற்றி கிண்டவும்.
  6. அத்துடன் உளுந்தங்களி மாவை சிறிது சிறிதாக கொட்டிக் கிண்டவும், நன்றாக அடிவரை கிண்டவேண்டும்.
  7. 8 முதல் 10 நிமிடத்தில் உளுந்தங்களி வெந்த விடும் கையில் தண்ணீர் தொட்டு, களியை தொட்டு பார்த்தால் கையில் ஒட்டக்கூடாது.
  8. கையில் ஒட்டினால் இன்னும் சற்றுநேரம் வேக வைக்க வேண்டும்.
  9. மாவை போடும் பொழுது மிதமான வெப்பநிலையில் தான் வைத்து கிண்ட வேண்டும். களி வெந்தப்பிறகு ஒரு குழி கிண்ணத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி அதில் உளுந்தங்களியை போட்டு கிண்ணத்தை கையால் சுற்றினால் உருண்டையாக வரும்.
  10. சிறிய சிறிய உருண்டையாக செய்து வைக்கவும், இந்த உருண்டையை களி சூடான நிலையிலேயே செய்ய வேண்டம். உளுந்தங்களி ரெடியாகி விட்டது.

Yield3

Serving size: 1 Cup
Calories per serving: 200
Fat per serving: 12g

உளுந்தங்களி (Uluntham kali) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *