வடகறிPublished: 2017-07-05Prep time: 3 hrs 0 min Cook time: 30 mins Total time: 3 hrs 30 mins
Summaryஇது ஆப்பம், இடியாப்பம் மற்றும் தயிர்சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடும்போது நன்றாக இருக்கும்.

- Ingredients
- கடலை பருப்பு – 200 கிராம்
- பூண்டு – 4, மிளகாய் வத்தல் – 3
- பெருங்காயம் தூள் – ½ டீஸ்பூன்
- தேங்காய் பால் – 1 கப்
- வத்தல்பொடி – 1 டீஸ்பூன்
- மல்லிப்பொடி – 1 டீஸ்பூன்
- சீரகப்பொடி – 1 டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன்
- கரம்மசாலா தூள் – 1½ டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- மஞ்சள்பொடி – ½ டீஸ்பூன்
- வெங்காயம் – 1, தக்காளி – 2
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
- தாளிக்க: பட்டை, சோம்பு, கடுகு, உளுந்து, கிராம்பு, இலவங்கப்பட்டை இலை கருவேப்பில்லை, கொத்தமல்லி இலை – சிறிதளவு
- Directions
- வடகறி (Vadacurry) செய்முறை வீடியோ…
- கடலை பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதை தண்ணீர் இல்லாமல் வடித்து கொள்ளவும்.
- அதனுடன் சீரகம், பூண்டு, வத்தல், பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் நெரு நெருப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- தேங்காய் உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பதத்தில் தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
- தக்காளி, வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்திருக்கும் கடலை பருப்பு கலவையை சிறு உருண்டையாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- சிறிதளவு மாவை மட்டும் பொரிக்காமல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- மற்றொரு கடாயில் கடுகு, உளுந்து, போட்டு தாளித்து அதனுடன் பட்டை, சோம்பு இலவங்கப்பட்டை இலை மற்றும் கிராம்பு போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுதுகளை போட்டு வதக்கவும், அதனுடன் உப்பு சேர்த்து வதக்கும்போது தக்காளி விரைவில் வதங்கிவிடும்.
- வதங்கிய பிறகு வத்தல்பொடி, மல்லிப்பொடி, சீரகப்பொடி, மஞ்சள்பொடி மற்றும் கரம்மசாலா தூளையும் சேர்த்து கலக்கவும், எடுத்து வைத்திருந்த மாவையும், இதனுடன் சேர்த்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
- ஐந்து நிமிடம் கொத்த பிறகு பொரித்த வடைகளை போட்டு, பிறகு தேங்காய்பாலையும் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிடவேண்டும்.
- அதன்மேல் கொத்தமல்லி தழைகளைத் தூவி இறக்கினால், சூடான வடகறி (Vadacurry) ரெடி.
Yield4
Serving size: 1 cup
Calories per serving: 200
Fat per serving: 12g