Search




வாழைப் பூ வடை – VazhaiPoo Vadai

3251
வாழைப் பூ வடைPrep time: 2 hrs 0 min Cook time: 45 mins Total time: 2 hrs 45 minsவாழைப் பூ வடைSummaryவாழைப் பூ வடை – VazhaiPoo Vadai










    Ingredients

  • வாழைப்பூ – 1
  • கடலை பருப்பு – 100கிராம்
  • பூண்டு, பச்சை மிளகாய்
  • சீரகம், பெருங்காயம் – ½ டீஸ்பூன்
  • அரிசிமாவு – சிறிதளவு
  • கொத்தமல்லி, கருவேப்பிலை – சிறிதளவு
  • எண்ணெய் & உப்பு
    Directions

  1. வாழைப் பூ வடை செய்முறை வீடியோ பாருங்கள் :
  2. முதலில் வாழைப்பூவை நரம்புகளை நீக்கி கொள்ளவும். அதனை சிறிதாக நறுக்கவும் அல்லது ஆனியன் கட்டரில் சிறு சிறு துண்டாக நறுக்கி கொள்ளவும்.
  3. பிறகு மற்றொரு பாத்திரத்தில் நன்கு ஊற்றிய கடலை பருப்பு, பூண்டு, சீரகம், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நெருநெருப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  4. நறுக்கிய வாழைப்பூவுடன் அரைத்து வைத்திக்கும் கடலை பருப்பை சேர்த்து பிசையவும்.
  5. இதனுடன் பெருங்காயம், கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  6. தண்ணீர் பதமாக இருந்தால் அதனுடன் சிறிதளவு அரிசிமாவு சேர்த்துக் கொள்ளவும். அரிசிமாவு சேர்த்தால் தண்ணீர் பதம் மாறுவதுடன் வடை மொறு மொறுப்பாகவும் இருக்கும்.
  7. இப்பொழுது மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டி கொள்ளவும்.
  8. பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தபிறகு உருண்டையை தட்டையாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  9. மிதமான சூட்டில் வேக விட வேண்டும். இருபுறமும் வேக விடவும். சூடான மொறு மொறுப்பான வாழைப்பூ வடை தயார்.
  10. இது குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் கொடுக்கலாம். மதிய உணவுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

Yield8

Serving size: 3 pcs
Calories per serving: 120
Fat per serving: 12

வாழைப் பூ வடை (VazhaiPoo Vadai) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.

 

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *