Search




Madurai Kitchen Veg Briyani

வெஜ் பிரியாணி – Veg Briyani

7817
வெஜ் பிரியாணிPrep time: 30 mins Cook time: 30 mins Total time: 60 minsவெஜ் பிரியாணிSummaryவெஜ் பிரியாணி – Veg Briyani










    Ingredients

  • பாஸ்மதி அரிசி – 500 கிராம்
  • பல்லாரி – 2
  • இஞ்சி, பூண்டு பேஸ்டு – 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா – ½ டீஸ்பூன்
  • மல்லி – ½ டீஸ்பூன்
  • மிளகாய் வத்தல் பொடி – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 4
  • பச்சை பட்டாணி – 50கி
  • கேரட் – 50கி, பின்ஸ் – 50கி
  • உருளை கிழங்கு – 50கி
  • புதினா, கொத்தமல்லி – சிறிது
  • முந்திரி பருப்பு – 5
  • எண்ணெய் – தேவையான அளவு
  • நெய் – 2 டீஸ்பூன்
  • கிராம்பு – 3, ஏலக்காய் – 2
  • பட்டை – 3 சிறிய துண்டு
  • பிரிஞ்சி இலை – ஒன்று
  • சோம்பு – ஒரு ஸ்பூன்
    Directions

  1. வெஜ் பிரியாணி (Veg Briyani) செய்முறை :-
  2. பட்டை, கிராம்பு, லவங்கப்பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய், சோம்பு இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் பொடிபண்ணி வைத்துக்கொள்ளவும்.
  3. இந்த பிரியாணி பொடியை, அதிகப்படியாக செய்து வைத்து கொண்டால், தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.
  4. பிரியானி செய்வதற்கு தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொண்டால் 30 நிமிடத்தில் பிரியாணி செய்யலாம்.
  5. பிரியாணி அரிசியை தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊர வைத்து, பிறகு தண்ணீர் இல்லாமல் நன்றாக வடித்து விடவேண்டும்.
  6. பல்லாரி வெங்காயத்தை (நீளவாக்கில்), 2 பச்சை மிளகாயை நறுக்கி கொள்ளவும், பச்சை பட்டாணி, புதினா எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  7. கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  8. குக்கரில் எண்ணெய்யை ஊற்றி அதில் பட்டை கிரம்பு, லவங்கப்பட்டை, பிரியாணி இலை, சோம்பு, ஏலக்காய் அனைத்தையும் போட்டு வதக்கவும்.
  9. அதில் பல்லாரி, புதினா, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும், வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும்.
  10. நறுக்கி வைத்துள்ள காய்களை எல்லாம் போட்டு வதக்கவும்,
  11. கரம் மசாலா, வத்தல் பொடி, மல்லி பொடி, மஞ்சல் பிரியாணி சாமான் பொடி போட்டு வதக்கவும்.
  12. 2 நிமிடம் நன்றாக மசாலா கலவை மிக்ஸ் ஆகும் வரை வதக்கி பிறகு 2 கப் தண்ணீர் ஊற்றி (1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர்), தேவையான உப்பு சேர்க்கவும்.
  13. தண்ணீர் கொதித்த பிறகு அரிசியைபோட்டு அதில் லெமன் சாறை ஊற்ற வேண்டும். குக்கரை மூடிவைத்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.
  14. கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்துக் கொள்ளவும். அதை சிவில் இறங்கிய பிறகு வெஜ் பிரியாணியில் போட்டு கிளறவும். இப்பொழுது வெஜ் பிரியாணி அருமையாக ரெடியாகி விட்டது.
  15. இதற்கு இணையாக (SIDE DISH) ரைத்தா – தயிர், நறுக்கிய பல்லாரி, கேரட், வெள்ளரிக்காய், சிறிது உப்பு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  16. பிரியாணியுடன் ரைத்தா நன்றாக இருக்கும்.

Yield4

Serving size: 1 Cup
Calories per serving: 150
Fat per serving: 12g

வெஜ் பிரியாணி (Veg Briyani) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *