வெண்டைக்காய் சாம்பார்Published: 2017-06-06Prep time: 15 mins Cook time: 20 mins Total time: 35 mins
Summaryவெண்டைக்காய் சாம்பார் – Vendakkai Sambar

- Ingredients
- துவரம்பருப்பு – 100 கிராம்
- நறுக்கிய சின்ன வெங்காயம் – 10
- நறுக்கிய தக்காளி – 1
- வெண்டைக்காய் – 250 கிராம்
- புளி – சிறிதளவு
- மசாலா பவுடர் – 2 டீஸ்பூன்
- கடுகு, உளுந்து, வெந்தயம், வத்தல் – தாளிக்க
- கறிவேப்பிலை, கொத்ததமல்லி தழை
- பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – தேவைக்கேற்ப
- Directions
- வெண்டைக்காய் சாம்பார் (Vendakkai Sambar) செய்முறை:
- வெண்டைகாயை சிறிது பெரியதாக நறுக்கி, கடாயில் எண்ணெய் ஊற்றி வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
- குக்கரில் துவரம் பருப்பை போட்டு அதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் மற்றும் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து 3 அல்லது 4 விசில் வைத்து எடுத்துக்கொள்ளவும்.
- வேக வைத்து துவரம் பருப்புடன் வதக்கிய வெண்டைக்காயையும், நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து கொள்ளவும்.
- அதில் சிறிதளவு புளி தண்ணீரை சேர்த்து கொள்ளவும். அத்துடன் சாம்பார் மசாலாவை சேர்த்து உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.
- பிறகு குக்கரில் ஒரு விசில் வைத்து எடுத்தால் வெண்டைக்காய் சாம்பார் ரெடியாகி விடும்.
- கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பில்லை போட்டு தாளித்து, அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், இரண்டு வத்தல் மற்றும் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து சாம்பாரில் ஊற்ற வேண்டும்.
- அதன் மேல் கொத்துமல்லி தழையை தூவி கிளறிவிட்டால் மணமணக்கும் வெண்டைக்காய் சாம்பார் தயாராகிவிடும்.
Yield5
Serving size: 1 cup
Calories per serving: 100
Fat per serving: 8g