Search




Vendhaya Kali Madurai Kitchen

வெந்தயக்களி – vendhaya Kali

4152
வெந்தயக்களி Prep time: 3 hrs 0 min Cook time: 20 mins Total time: 3 hrs 20 minsவெந்தயக்களி Summaryவெந்தயக்களி – vendhaya Kali வெந்தயம் அதிகம் சோர்ப்தால் உடம்பில் உள்ள சுட்டை குறைக்கும், வயிற்றுப்புண் ஆற்றும் குழந்தைகளுக்கு சோர்ப்பதால் உடல் வழுவாக இருக்கும், இது காலையில் சாப்பிட்டால் மிகவும் நன்று.










    Ingredients

  • இட்லிஅரிசி – 200 கிராம்
  • வெந்தயம் – 3 டீஸ்பூன்
  • உளுந்து – 1 டீஸ்பூன்
  • வெள்ளம் – 500கி
  • நல்லெண்ணெய் – 150 மி
    Directions

  1. வெந்தயக்களி – vendhaya Kali செய்முறை :-
  2. இட்லி அரிசி, வெந்தயம், உளுந்து இவை மூன்றையும் குறைந்தபட்சம் 2-3 மணி நேரம் ஊர வைக்க வேண்டும்.
  3. மூன்றையும் நன்றாக வழுவழுப்பாக அரைத்துஎடுத்துக் கொள்ளவும். இவை தோசைமாவு பாத்தில் இருக்க வேண்டும்.
  4. வெள்ளம் பாகு செய்முறை :-
    வெள்ளதை சிறு சிறு துண்டாக உடைத்துக் கொள்ளவும் அதை 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  5. ஒரு கனமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும், அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மாவையும் போட்டு மிதமான வெப்பநிலையில் களியை கிண்டவும், 5 முதல் 8 நிமிடம் வரை கிண்டவும். பாத்திரத்தில் அடிவர கிண்ட வேண்டும்.
  6. பிறகு கையில் தண்ணீர் தோட்டு களியை தோட்டு பார்த்தல் கையில் ஒட்டக் கூடாது, அவ்வாறு இருந்தால் நன்றாக வெந்து விட்டது. கையில் ஒட்டினால் இன்னும் சிறிது நேரம் களியை கிண்டவும்.
  7. நன்றாக வெந்தயுடன் வெள்ள பாகுவை ஊற்றி கிண்டவும் நடுவில் நடுவில் நல்லெண்ணெய்யை ஊற்றி கிண்டவும். களி நன்றாக மிக்ஸ் ஆகி கொட்டியான பாதத்திற்கு வந்துவிடும்.
  8. சுட சுட வெந்தயக்களி ரெடியாகி விட்டது.

Yield5

Serving size: 1 கப்
Calories per serving: 250
Fat per serving: 7

வெந்தயக்களி – vendhaya Kali சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.