விரால் மீன் வறுவல் Published: 2020-01-29Prep time: 30 mins Cook time: 30 mins Total time: 60 mins
Summaryவிரால் மீன் வறுவல் – Viral Meen Varuval வீட்டிலேயே எளியமுறையில் விரால் மீன் வறுவல் செய்வது எப்படி என்பதை வீடியோவில் பார்க்கலாம்.

- Ingredients
- விரால் மீன் – 11/2 கி
- மிளகு சீரகத் தூள் – 2 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் தூள் – 25கி
- பூண்டு – 10 – 15
- உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
- Directions
- விரால் மீன் வறுவல் – Viral Meen Varuval செய்முறை:-
- மீனை நன்றாகவிரால் கழுவி பிறகு அதில் இரண்டு கரண்டி இட்லி மாவு அல்லது தோசை மாவு சேர்த்துக் கலந்து 10 நிமிடம் ஊறவைத்து, அதன் பிறகு கழுவி சமைத்தால் மீன் கவுச்சி வாடை இல்லாமல் இருக்கும்.
- மிளகு சீரகத் தூள், சிவப்பு மிளகாய் தூள், பூண்டு மற்றும் உப்பு இவை அனைத்தையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- மசாலாவை மீன் துண்டுகளில் நன்றாகத் தடவி, அதை ஒரு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் மசாலா பொரித்து எடுக்கும் போது கலராமல் இருக்கும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்தெடுக்கவும்.
- மிதமான சூட்டில் பொரித்தால் மீன் உள்ளே நன்றாக வெந்திருக்கும் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
- சுவையான விறால் மீன் வறுவல் ரெடி செய்து பாருங்கள்.
Yield6
Serving size: 4