கோதுமை அல்வாPublished: 2017-11-18Prep time: 20 mins Cook time: 45 mins Total time: 1 hr 5 mins
Summaryகோதுமை அல்வா – Wheat Halwa

- Ingredients
- கோதுமை மாவு – 150 கிராம்
- சர்க்கரை – 400 கிராம்
- நெய் – 150 கிராம்
- முந்திரி பருப்பு – 10
- ஏலக்காய் – ¼ டீஸ்பூன்
- Directions
- கோதுமை அல்வா செய்வது எப்படி வீடியோ பாருங்கள்:
- ஒரு கப் கோதுமை மாவை தண்ணீரில் கரைக்க வேண்டும். நன்கு கரைத்த மாவை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். சக்கையை பிரித்து எடுத்து விட வேண்டும்.
- கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்யை விட்டு முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு அதே கடாயில் சர்க்கரையை சேர்த்து அல்வாவிற்கு தேவையான நிறம் வருவதற்காக தயார் செய்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் கரைத்த மாவை ஊற்றி தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். மாவில் பச்சை வாடை போகும் வரை கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
- இடை இடையே நெய்யை ஊற்றி கடாயில் ஒட்டாதவாறு கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
- சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து அல்வாவை நன்கு கிளறவும்.
- பிறகு ஏற்கனவே தயார் செய்த சர்க்கரை பாகுவை லேசாக சூடேற்றி அதையும், அதனுடன் முந்திரியையும் சேர்த்து அல்வாவை நன்கு கிளறவும்.
- ஒரு தட்டில் நெய் தடவி அல்வாவை ஊற்றவும் சூடான கோதுமை அல்வா ரெடி.
Yield4
Serving size: 1 கப்
Calories per serving: 200
Fat per serving: 10
கோதுமை அல்வா ( Wheat Halwa) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.